[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS திமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS என்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்
  • BREAKING-NEWS கரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை

‘ஹாய்.. என் பெயர் மோடி.. நாட்டின் பிரதமர்’... ராகுல்காந்தி கடும் கிண்டல்

congress-bjp-engage-in-war-of-words-over-technology-and-user-data

பிரதமர் மோடியின் ஆப்ஸ் மூலம் மக்களின் தகவல்கள் திருடப்படுவதாக வெளியான விவகாரத்தில் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி இடையே கடுமையான வார்த்தை போர் மூண்டுள்ளது.

மக்களுடன் உரையாடவும், செய்திகளை பகிர்ந்துகொள்ளவும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களில் ‘நரேந்திர மோடி மொபைல் அப்ளிகேஷனை’ (Narendra Modi Mobile App) பிரதமர் மோடி கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை 17-ம் தேதி அறிமுகம் செய்துவைத்தார். இதனை கூகுள் பிளே ஸ்டோரில் மூலம் பதிவிறக்கம் செய்யலாம். இந்த மொபைல் ஆப்ஸில், பிரதமர் மோடியின் அறிவிப்புகள், திட்டங்கள், தனிப்பட்ட முறையிலான மின்னஞ்சல்கள், மான்கிபாத் உரைகள் போன்றவை இடம்பெற்றிருக்கும்.

இதனிடையே, மோடி ஆண்ட்ராய்ட் ஆப்ஸில்(செயலி) பதிவு செய்யும் இந்தியர்களின் தனிப்பட்ட விவரங்களை அவர்களின் சம்பந்தமின்றி அமெரிக்க நிறுவனம் ஒன்று திருடுவதாக அதிர்ச்சி தகவல் வெளியானது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இணைய பாதுகாப்பு நிறுவனத்தின் ஆய்வாளர் எலியாட் ஆல்டர்சென் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்த பல தகவல்களை பதிவிட்டிருந்தார்.

இந்த விவகாரம் பாரதிய ஜனதா கட்சிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் இதுதொடர்பாக பாஜக- காங்கிரஸ் இடையே வார்த்தை போர் மூண்டுள்ளன. இதுதொடர்பாக பிரதமர் மோடியை விமர்சித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “ஹாய். என் பெயர் நரேந்திர மோடி. நான் தான் இந்தியாவின் பிரதமர். என்னுடைய அலுவலக ரீதியான அதிகாரப்பூர்வ மொபைல் ஆப்பை நீங்கள் பதிவேற்றம் செய்யும்போது உங்களின் அனுமதி இல்லாமலேயே உங்களின் தகவல்களை என்னுடைய நண்பர்களான அமெரிக்க கம்பெனிக்கு கொடுத்துவிடுவேன்” என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

இதற்கு பாஜகவும் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளது. டெக்னாலஜியில் ராகுல்காந்தி அறிவே இல்லாதவர் என பாஜக விமர்சித்திருக்கிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close