ஐ.எஸ் அமைப்புக்கு ஆட்களை சேர்த்த பீகாரை சேர்ந்த இளம்பெண்ணுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் கேரளா மாநிலம் கசர்கோட் மாவட்டத்தைச் சேர்ந்த கிட்டத்தட்ட 15 இளைஞர்கள் திடீரென மாயமாகினர். இதனையடுத்து கசர்கோட் மாவட்டத்தைச் சேர்ந்த போலீசார் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். பின்னர் இந்த வழக்கு தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்பட்டது. அதில் மாயமான இளைஞர்கள் தங்களை ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் இணைத்துக்கொண்டது தெரியவந்தது.
இதனிடையே இளைஞர்களை ஐ.எஸ் அமைப்பில் சேர்த்துவிட உதவிய இளம்பெண்ணை டெல்லி விமான நிலையத்தில் போலீசார் கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்தனர். அவர் காபூலுக்கு தப்பிச் செல்லவிருந்த நிலையில் அப்பெண்ணை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து தேசிய புலானாய்வு அமைப்பினர் விசாரணை நடத்தியதில் அவர் பெயர் யாஜ்மின் என்பது தெரியவந்தது. இவர் பீகாரைச் சேர்ந்தவர். இதுதொடர்பான வழக்கு விசாரணை கேரளாவில் உள்ள நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், யாஸ்மினுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை இன்று விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் ஐ.எஸ் அமைப்புக்கு ஆள் சேர்த்த புகாரில் தண்டனை விதிக்கப்பட்ட முதல் பெண் யாஸ்மின் என்பது குறிப்பிடத்தக்கது.
வன்முறையில் முடிந்த போராட்டம்: ஆனி வேராக இருந்த வாட்ஸ்அப் அட்மின்கள் அதிரடி கைது
முண்டமாக மரத்தில் தொங்கவிடப்பட்ட பெண்: கேரளாவில் அதிர்ச்சி
100 கோடியை உதறித் தள்ளிவிட்டு துறவியான இளைஞர்
கர்நாடக பேரவைத் தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
” எனக்கென்று ஒரு கௌரவம் இருக்கிறது” - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
கடுகு டப்பாவும், பேங்க் டெபாசிட்டும் ! பெண்களுக்கு சில டிப்ஸ்
அதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..? ஒரு பார்வை..!
நாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்
11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்
தீண்டாமைக்கு சம்மட்டி அடி ! தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்