[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS திமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS என்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்
  • BREAKING-NEWS கரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை

லாலு பிரசாத்திற்கு 7 ஆண்டு சிறை!

animal-feed-abuse-case-again-lalu-gets-7-years-of-prison

கால்நடைத் தீவன முறைகேடு தொடர்பான 4வது வழக்கில் ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவிற்கு ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் 7 ஆண்டுகள்  சிறை தண்டனை அளித்து, 60 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளது.

பீகார் முதலமைச்சராக இருந்த போது 1990களில் தும்கா கருவூலத்தில் 3 கோடியே 13 லட்சம் ரூபாயை மோசடி செய்ததற்காக லாலு பிரசாத்திற்கு இந்தத் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. லாலு உட்பட 18 பேர் குற்றவாளிகள் என ராஞ்சி நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில் இன்று தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் ஜெகந்நாத் மிஸ்ரா உள்ளிட்ட 12 பேர் குற்றமற்றவர்கள் என ராஞ்சி நீதிமன்றம் விடுவித்தது. ஏற்கனவே கால்நடைத் தீவன முறைகேடு தொடர்பான 3 வழக்குகளிலும் லாலு சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். தற்போது ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாலு பிரசாத் யாதவிற்கு இது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லாலு பிரசாத் யாதவ் மீது மேலும் ஒரு கால்நடைத் தீவன முறைகேடு வழக்கு நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close