[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சியாச்சினில் கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் பால்பாண்டி உயிரிழப்பு
  • BREAKING-NEWS ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தயார் - சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நூறு நாள் வேலைதிட்டத்தை 200 நாட்களாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் - அதிமுக கூட்டணியில் போட்டியிடும் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவாக முதல்வர் பழனிசாமி பரப்புரை
  • BREAKING-NEWS மணல் கடத்தலுக்கு உதவிய எத்தனை அதிகாரிகள் மீது குண்டாஸ் போடப்பட்டுள்ளது? - உயர்நீதிமன்ற கிளை
  • BREAKING-NEWS திருச்சியில் வரும் 25ல் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன்; தேர்தல் பரப்புரைக்காக ராகுல் காந்தி விரைவில் தமிழகம் வருவார் - திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS லோக்பால் அமைப்பின் முதல் தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பினாகி சந்திரகோஷ் பதவியேற்றார்
  • BREAKING-NEWS தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் 27ம் தேதி முதல் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார்

நான் தோற்றுவிட்டேன் என்னையே வெறுக்கிறேன்! தற்கொலை செய்து கொண்ட சிறுமி கிறுக்கல்

i-am-failure-schoolgirl-who-complained-of-sex-abuse-wrote-in-notebook

 

நொய்டாவில் பள்ளி மாணவி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பத்தில் மாணவி மன அழுத்ததில் இருந்தது தெரியவந்துள்ளது

நொய்டாவை சேர்ந்த இக்‌ஷா ராகவ் ஷா என்ற 15 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில் நேற்றுமுன் தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். வெளியில் சென்ற அவளது பெற்றோர்கள் வந்து பார்த்த போது அவளது அறை பூட்டியிருந்தது. நீண்ட நேரமாகியும் சிறுமியிடம் இருந்து எந்தப் பதிலும் இல்லை. இதனால் சந்தேகமடைந்தவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். அவரை மீட்ட அவரது குடும்பத்தினர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இவ்விவகாரத்தில் சிறுமியின் பெற்றோர்கள் பள்ளி ஆசிரியர்கள் மீது குற்றஞ்சாட்டுகின்றனர். சிறுமி பள்ளி தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றும் இதனால் அவளது ஆசிரியர்கள் அவளை திட்டியதாக தெரிவித்தனர். இதன் காரணமாக சிறுமி மிகுந்த மனவேதனையுடன் இருந்ததாகவும் கூறியுள்ளனர்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இவ்விவகாரத்தில் சிறுமியின் நோட்டு, புத்தகங்களை காவல்துறையினர் ஆய்வு செய்தனர்.அதில் ஒரு புத்தகத்தில் நான் தோற்றுவிட்டேன், நான் என்னையே வெறுக்கிறேன் என ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். மேலும் அந்த பக்கத்தில் தனது கையெழுத்துக்களை ஏராளமாக கிறுக்கியுள்ளார். இது சிறுமியின் கையெழுத்துதானா என்பது குறித்து அவரது பெற்றோர்களிடம் காவல்துறையினர் உறுதிசெய்து கொண்டனர். 

ஏற்கனவே இவ்விவகாரத்தில் சிறுமியின் பள்ளி ஆசிரியைகள் இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளி நிர்வாகம் கூறுகையில், இது ஒரு துரதிர்ஷ்டமான சம்பவம். மாணவி தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால் சிபிஎஸ்இ வழங்கியுள்ள அறிவுறுத்தலின் படி மறுதேர்வுக்கு அனுமதிக்கப்பட்டிருப்பார் என தெரிவித்தனர். இதுதொடர்பாக விசாரணை நடைபெறும் என பள்ளியின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close