[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS ஆதார் செல்லுமா ? செல்லாதா ? என்பது குறித்து உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு நாளை தீர்ப்பளிக்கிறது
  • BREAKING-NEWS சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுத்தது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS விநாயகர் சிலை ஊர்வலத்தில் பேசியதை நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்க ஹெச்.ராஜா எதிர்ப்பு
  • BREAKING-NEWS தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
  • BREAKING-NEWS உலகின் சிறந்த கால்பந்து வீரராக லூகா மோட்ரிச் தேர்வு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.13 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.36 காசுகளாகவும் விலை நிர்யம்

காதலனை காப்பாற்ற தந்தையை கொன்ற மகள்...!

daughter-pushes-father-down-the-stairs-to-save-her-lover

தான் விரும்பிய காதலனை காப்பாற்ற பெற்ற தந்தையை மாடியிலிருந்து கீழே தள்ளிவிட்ட மகள் மீது அவரது அம்மா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்தவர் விஷ்ணு. இவர் தனது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது அதிகாலை 4 மணியளவில் சிறிய சத்தம் அவரை தொந்தரவு செய்திருக்கிறது. சத்தம் வந்த இடம் தனது மகளின் அறை என்பதால் அதனை திறந்து பார்த்திருக்கிறார் விஷ்ணு. கதவை திறந்த விஷ்ணுவுக்கு காத்திருந்தது அதிர்ச்சி. அங்கு தனது மகள் அவரது காதலுடன் இருந்திருக்கிறார். இதனையடுத்து விஷ்ணு, தனது மகளின் காதலனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றவே இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டிருக்கிறது. அப்போது தனது காதலனை காப்பாற்றுவதற்காக மூன்றாவது மாடியில் இருந்து மகளும், அவரின் காதலனும் இணைந்து விஷ்ணுவை எதிர்பாராதவிதமாக கீழே தள்ளிவிட்டிருக்கின்றனர்.

ஏதோ பலத்த சத்தம் கேட்டதால் விஷ்ணுவின் மனைவி அங்கு வந்து பார்த்திருக்கிறார். ஆனால் விஷ்ணு அதற்குள் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து விஷ்ணுவின் மனைவி ஷாந்தி, தனது மகள் மற்றும் அவரின் காதலன் மீது காவல்நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விஷ்ணுவின் மகளை கைது செய்துள்ளனர். ஆனால் அவரது காதலன் தப்பிஓடிவிட்டார். போலீசார் அவரை தீவிரமான தேடும்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close