[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்
  • BREAKING-NEWS கரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

உலகிலேயே மிகப்பெரிய சூரிய மின்சக்தி பூங்கா கர்நாடகாவில் திறப்பு

this-solar-park-launched-in-karnataka-is-the-world-s-largest

உலகிலேயே மிகப்பெரிய சூரிய மின்சக்தி பூங்கா கர்நாடாகவில் திறக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய சூரிய மின்சக்திப் பூங்கா கர்நாடகா மாநிலம் தும்கூர் மாவட்டத்தில் திறக்கப்பட்டுள்ளது. ரூபாய் 16,500 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்தச் சூரிய மின்சக்தி பூங்காவை கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா திறந்துவைத்தார்.

மொத்தமாக 5 கிராமங்களை உள்ளடக்கி 13,000 ஏக்கர் பரப்பளவில் இந்த பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. ‘ஷக்தி ஸ்தலா’ என்பது இந்தப் பூங்காவின் பெயராகும்.  வெறும் 2 வருடத்தில் இத்திட்டம் தொடங்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. இதில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயம் என்வென்றால் திட்டத்திற்கு ஒரு சென்ட் நிலம் கூட விவசாயிகளிடம் இருந்து வாங்கப்படவில்லை. ஆனால் திட்டத்திற்காக 2,300 விவசாயிகளிடமிருந்து நிலங்களை வாடகைக்கு தான் பெற்றுள்ளது அரசு. இதன்மூலம் விவசாயிகளுக்கு வாடகை கிடைக்கும் என்பது மகிழ்ச்சியே.

திட்டத்தை தொடங்கிவைத்து பேசிய முதலமைச்சர் சித்தராமையா, நாட்டின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியில் மூன்றாவது மிகப்பெரிய மாநிலமாக கர்நாடகா விளங்குகிறது. எதிர்காலத்தில் கர்நாடகம்  மின்உற்பத்தியில் உபரி மாநிலமாக இருக்கும் என தெரிவித்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close