[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இருசக்கர வாகனத்தை ஓட்டுபவருடன் பின்னால் அமர்ந்து செல்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயம்- உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஹெல்மெட் கட்டாயம் என்பதை அமல்படுத்த தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS இருசக்கர வாகனங்களை விற்கும் நிறுவனங்களே ஹெல்மெட்டையும் இலவசமாக வழங்க வேண்டும்- தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS வாகன ஆய்வாளர் வங்கி லாக்கரில் 9.5 கிலோ தங்கம் பறிமுதல்
  • BREAKING-NEWS சென்னை, கடலூர், நாகை துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது
  • BREAKING-NEWS சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.48 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.10 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS திமுகவுக்கு எதிராக வரும் 25ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் - முதல்வர் பழனிசாமி

நுரையீரல் நோயால் உயிரிழந்த கர்ப்பிணி யானை!

kerala-elephant-die-for-lung-disease

தேக்கடி வனப்பகுதியில் இறந்த நிலையில் கிடந்த 20 வயது மதிக்கத்தக்க கர்ப்பிணி காட்டுயானையின் உடல் மீட்கப்பட்டது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தேக்கடி பெரியார் புலிகள் காப்பகத்தின் தேக்கடி வனச்சரகத்தில், வனத்துறையினர் கண்காணிப்புபணியில் ஈடுபட்டிருந்தபோது, பச்சக்கானம் என்ற காட்டுப்பகுதியில் துர் நாற்றம் வீசுவது தெரியவந்துள்ளது. இதையடுத்து வனத்துறையினர் சம்பவ இடம் சென்று பார்த்தபோது, காட்டு யானை ஒன்று இறந்த நிலையில் கிடந்ததுள்ளது.

யானையின் உடலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவர் தலைமையிலான குழுவினர் நிகழ்விடத்திலேயே உடற்கூறு பரிசோதனை செய்தனர். பரிசோதனையில் யானை கர்ப்பமாகி இருப்பதும், குறை மாதங்களே ஆன யானைக்குட்டியும் உயிரிழந்த நிலையில் இருப்பதும் தெரிய வந்தது. 20 வயது மதிக்கக்கத்தக்க இந்த கர்ப்பிணி யானையின் நுரையீரலில் தண்ணீர் தேங்கியிருப்பது உடற்கூறு பரிசோதனையில் தெரியவந்தது. இதனால் நுரையீரல் நோயால் சுவாசக்கோளாறு ஏற்பட்டு யானை இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close