[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ரயில் கொள்ளை வழக்கில் கைதான 5 கொள்ளையர்களுக்கு நவம்பர் 26ம் தேதி வரை காவல் நீட்டித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS தருமபுரி : பிளஸ்2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இறந்த வழக்கில் சதீஷ் என்பவர் நேற்று கைதுசெய்யப்பட்ட நிலையில் 2வது நபரான ரமேஷ் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்
  • BREAKING-NEWS மத்திய அமைச்சர் அனந்த்குமார் (59) உடல்நலக்குறைவால் காலமானார்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.56 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.43 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS 3வது மற்றும் கடைசி டி-20 போட்டியில் இந்திய அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மேற்கு இந்திய தீவுகள் அணி
  • BREAKING-NEWS அடுத்த 24 மணி நேரத்தில் ‘கஜா’ தீவிர புயலாக மாறும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS இலங்கை சுதந்திர கட்சியில் இருந்து விலகி இலங்கை பொதுஜன முன்னணி கட்சியில் இணைந்தார் ராஜபக்ச; அவருடன் முன்னாள் எம்.பி.க்கள் 50 பேரும் இணைந்துள்ளனர்

தாஜ்மகாலை காண இனி கூடுதல் கட்டணம்..!

come-april-pay-rs-50-for-entering-taj-mahal-rs-200-for-seeing-main-mausoleum

உலகப்புகழ் பெற்ற சுற்றுலா தலமான தாஜ்மகாலை காண்பதற்கான நுழைவுக் கட்டணத்தையும், அதன் முக்கிய மசூதியை காண்பதற்கான கட்டணத்தையும் உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது.

இதன்படி தாஜ்மகாலை காண்பதற்கான நுழைவுக் கட்டணம் 40 ரூபாயிலிருந்து 50 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. தாஜ்மகாலின் முக்கிய மசூதியை காண 200 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் என்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா கூறியுள்ளார். தற்போது முக்கிய மசூதியை காண்பதற்கு தனியாக கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை. தாஜ்மகாலை பாதுகாப்பதற்காகத்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்தக் கட்டண உயர்வு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. 50 ருபாய்க்கு வழங்கப்படும் டிக்கெட்டுகள் 3 மணி நேரத்திற்கு மட்டுமே செல்லத்தக்கதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு நிலையம் நடத்தப்பட்ட ஆய்வில் தாஜ்மகாலின் முக்கிய மசூதிக்குள் நுழையும் மக்களின் எண்ணிக்கையை குறைக்கவேண்டும் என பரிந்துரைத்துள்ளதாக அவர் கூறினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close