[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS பாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS கேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு
  • BREAKING-NEWS டெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது
  • BREAKING-NEWS வெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு
  • BREAKING-NEWS கொச்சி விமான நிலையம் மூடல்
  • BREAKING-NEWS வரலாற்று நாயகன் அஜித் வடேகர் மறைந்தார்

துப்பாக்கியை காட்டி கணவரின் உயிரைக் காப்பாற்றிய மனைவி..!

woman-save-her-husband-life

கணவரின் உயிரை மனைவி துப்பாக்கி மூலம் காப்பாற்றிய சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் காகோரி மாவட்டத்தில் தனது வீட்டு வாசலில் நின்ற ஒருவரிடம், பேச்சு கொடுப்பதுப் போல ஒருவர் பேசத்தொடங்குகிறார். அந்த நேரத்தில் நான்கைந்து பேர் கொண்ட கும்பல் ஒன்று வீட்டு வாசலில் நின்றவரை கடுமையாக தாக்குகிறது. உருட்டுக் கட்டையால் அடிப்பதுடன் பலமுறை அந்த நபரை மிதித்து தாக்குகின்றனர். முதலில் பேச்சுக் கொடுப்பது போல வந்த ஒருவரும் இந்த சம்பவத்திற்கு உடந்தைதான்.

பலபேர் தாக்கியதால் அந்த நபர் அலறியடிக்கிறார். இதனையடுத்து அலறல் சத்தம் கேட்டு வீட்டிலிருந்து வெளியே ஓடிவந்த அவரது மனைவி என்னவென்று பார்க்கிறார். அப்போது தனது கணவர் நான்கைந்து பேரால் தாக்கப்படுவதை கண்டு அதிர்ச்சி அடைகிறார். சிறிது நேரம் கூட தாமதிக்காமல், அந்தப் பெண் வீடடிலிருந்து துப்பாக்கியை எடுத்துவந்து அந்த கும்பலை நோக்கி சுடுவது போல மிரட்டுகிறார். இதனால் பயந்துபோன அந்த கும்பல் அங்கிருந்து தப்புகிறது. எதற்காக அந்த கும்பல் அவரை தாக்கியது என தெரியவில்லை. இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close