[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்றம், சட்டப்பேரவை தேர்தலில் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் பாஜக-சிவசேனா இணைந்து போட்டி
  • BREAKING-NEWS இடைக்கால உபரித்தொகை வழங்க வேண்டும் என மத்திய அரசு கோரிய நிலையில், மத்திய அரசுக்கு இடைக்கால உபரித்தொகையாக ரூ.28,000 கோடியை வழங்க ரிசர்வ் வங்கி முடிவு
  • BREAKING-NEWS ஆளுநர்-முதலமைச்சர் இடையேயான பிரச்னையை தீர்த்து புதுச்சேரியில் அமைதி நிலவ நடவடிக்கை எடுக்க வேண்டும் - உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் கடிதம்
  • BREAKING-NEWS புல்வாமா தாக்குதலின் காரணமாக, பாகிஸ்தானுடன் எந்த விளையாட்டு தொடர்களிலும் அரசு உத்தரவு அளிக்கும் வரை ஈடுபடப்போவதில்லை என்பதில் தெளிவாக இருக்கிறோம் - ராஜீவ் சுக்லா (ஐபிஎல் தலைவர்)
  • BREAKING-NEWS கிரண்பேடியின் அழைப்பை ஏற்று இன்று மாலை 5 மணிக்கு பேச்சுவார்த்தைக்கு செல்கிறேன்- புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி
  • BREAKING-NEWS புதிய உச்சத்தில் தங்கம் விலை -ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.3,196க்கு விற்பனை
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை! ஆலையை திறக்கலாம் என தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பும் ரத்து!

மாடுகளுக்கு ஆதார் எண்: 50 கோடி செலவிட மத்திய அரசு முடிவு?

centre-to-spend-rs-50-crore-to-tag-four-crore-cows-in-aadhaar

மாடுகளுக்கு ஆதார் எண் வழங்க மத்திய அரசு ரூபாய் 50 கோடி செலவு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பொதுமக்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என்றும், அதன்மூலமே அரசின் நலத் திட்டங்களை பெற முடியும் என்றும் மத்திய அரசு அறிவித்தது. ஆதார் கட்டாயமாக்கப்படுவதற்கு பல தரப்பில் எதிர்ப்புகளும் கிளம்பின. ஆதார் தொடர்பான பல வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

இதனிடையே 'பசு மாடுகள் கடத்தப்பட்டு, கொல்லப்படுவதை தடுக்கும் வகையில், அவற்றுக்கும் 'ஆதார்' எண் போன்ற அடையாள எண் வழங்க வேண்டும் என மத்திய அரசு ஏற்கனவே முடிவு செய்திருந்தது. இதற்காக 12 இலக்க அடையாள எண்ணை உருவாக்க வல்லுநர்களை கால்நடை வளர்ப்பு துறை நியமித்தது. இந்த அடையாள அட்டை மாட்டின் காது மடலில் ஒட்டப்படும் என்றும் கூறப்படுகிறது

இந்நிலையில் மாடுகளுக்கு ஆதார் எண் வழங்க மத்திய அரசு ரூபாய் 50 கோடி செலவு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. முதற்கட்ட 400 லட்ச மாடுகளுக்கு ஆதார் எண் வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆதார் அட்டையில் மாடுகளின் அடிப்படை தகவல்கள் இடம்பெற்றிருக்கும். அதாவது மாட்டின் வயது, உயரம், உடல் குறிப்புகள், பாலியல் போன்ற விவரங்கள் இடம்பெற்றிருக்கும் என சொல்லப்படுகிறது. மாடுகளுக்கு வழங்கப்பட உள்ள ஒரு ஆதார் அட்டைக்கு ரூபாய் 8 முதல் ரூபாய் 10 வரை செலவாகும் என்றும் கூறப்படுகிறது

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close