[X] Close
JUST IN

பொருளாதார ஆய்வறிக்கையின் சில முக்கிய அம்சங்கள்

arun-jaitley-budget-2018

ஜிஎஸ்டி வரி அமலான பின் மறைமுக வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 50 சதவீதம் வரை வளர்ச்சிக் கண்டுள்ளது. குறிப்பாக சிறு நிறுவனங்களில் மிக அதிகமானவர்கள் இம்முறை தாங்களாகவே முன்வந்து பதிவு பெற்றுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. 

அதேபோல, தொழில் ரீதியாக வளர்ந்த மாநிலங்கள் புதிய வரிமுறையால் இழப்புகளைச் சந்திக்கும் என்ற கருத்து உண்மையல்ல என்பது வரிவசூலின் யதார்த்த நிலையில் இருந்து தெரிய வருவதாகவும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். 

விவசாய நாடு என சொல்லப்பட்டு வரும் இந்தியாவில், இந்த ஆண்டு தொழிலாளர் எண்ணிக்கை கணக்கீடு சொல்லும் தகவல் வேறு. அதாவது, நாடு முழுவதும் உள்ள விவசாயம் சாராத, பிற தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் கணக்கில் கொண்டு பார்க்கும்போது, அது மொத்த தொழிலாளர் எண்ணிக்கையில் 53 சதவீதத்தை எட்டுவதாக மத்திய அரசின் ஒரு புள்ளிவிவரக் கணக்கு தெரிவிக்கிறது.

ஏற்றுமதியில் ஈடுபடும் மாநிலங்களின் பொருளாதார நிலை, மற்ற மாநிலங்களை விட வலிமை பெற்றதாகவே உள்ளது எனவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close