[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இலங்கை சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட 109 மீனவர்கள் காரைக்கால் துறைமுகம் வந்தடைந்தனர்
  • BREAKING-NEWS அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய எம்.ஏ.சித்திக் ஐஏஎஸ் தலைமையில் ஒருநபர் குழுவை அமைத்தது தமிழக அரசு
  • BREAKING-NEWS காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக மத்திய அரசை வலியுறுத்த சட்டப்பேரவையை கூட்ட வேண்டும் - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS நான் பூ அல்ல விதை; என்னை முகர்ந்து பார்க்காதீர்கள் விதைத்து பாருங்கள் வளருவேன் - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS மதுரை மீனாட்சியம்மன் கோயில் தீ விபத்து குறித்து ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட குழுவை அமைத்தார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை
  • BREAKING-NEWS சென்னையில் முதல்வர் தலைமையில் மார்ச்.5,6,7 ஆம் தேதிகளில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு நடைபெறும் என அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழக அரசியல் களத்தில் கவர்ச்சிகரமான காகிதப் பூக்கள் மலரலாம்; ஆனால் மணக்காது- மு.க ஸ்டாலின்

பெங்களூர் ஏரியில் தீ: போராடி அணைத்த ராணுவ வீரர்கள்!

bengaluru-lake-fire-how-army-jawans-fought-blaze

பெங்களூரு பெல்லந்தூர் ஏரியில் பிடித்துள்ள தீயை, 5000 ராணுவ வீரர்கள் போராடி அணைத்தனர்.

பெங்களூருவில் உள்ள பெல்லந்தூர் ஏரியில் அப்பகுதியை சுற்றியுள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கலக்கிறது. இதனால் தண்ணீரில் வெள்ளை நுரை உருவாகி ஓடும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. இந்நிலையில், இப்போதும் வெள்ளை நுரை உருவாகி இருந்தது. நேற்று அந்த நுரையில் திடீரென்று பயங்கரமாகத் தீப்பிடித்தது. அந்த தீ, ஏரியில் பரவி இருந்த நுரையில் எரியத் தொடங்கியது. ஏரியின் நடுவே இருந்த புற்கள், செடிகளுக்கும் தீ பரவி கரும்புகை எழுந்தது.

இதுபற்றி தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ராணுவ வீரர்களும் வரவழைக்கப்பட்டனர். சுமார் 5 ஆயிரம் ராணுவ வீரர்கள் தீயை போராடி அணைத்தனர். இப்போது நிலைமை கட்டுக்குள் வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close