[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் -2, நிலவின் வட்டப் பாதையைச் சுற்றத் தொடங்கியது
  • BREAKING-NEWS பால் உற்பத்தியாளர்கள்-மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு. கோரிக்கை குறித்து சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு
  • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

விமான நிலையத்திற்குள் நுழைந்த பசு!

cows-entering-the-airport

அகமதாபாத் சர்வதேச விமான நிலையத்திற்குள் பசு மாடு ஒன்று நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்தில், திடீரென்று பசு மாடு ஒன்று நுழைந்தது. இதனால், விமானங்கள் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. அதிகாலை 2.30 மணியளவில் பயணிகள் விமானம் ஒன்று தரையிரங்கும் நேரத்தில், பசு மாடு திடீரென்று நுழைந்தது. பசுவைக் கண்ட அதிகாரிகள் அதனை வெளியேற்ற துரத்தினர். மிரண்ட பசு, விமானங்கள் தரையிறங்கும் பகுதிக்குள் நுழைந்ததால் விமானங்கள் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து விமானங்கள் மும்பை நோக்கி மாற்றிவிடப்பட்டன.

நேற்று அதிகாலை நிகழ்ந்த இந்த சம்வத்தால் விமான நிலையம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. விமான நிலையத்தின் பின்புறம் உள்ள கேட் மூலம் பசு மாடு உள்ளே நுழைந்துள்ளது என்று பணியில் இருந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்பு இதே போல் பல விமான நிலையங்களில் பறவைகள், குரங்குகள் நுழைந்தது குறிப்பிடத்தக்கது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close