[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS என்னைக் கைது செய்தால் கவலைப்படமாட்டேன்; ஆனால் ராஜிவ்காந்தியை ஆதரித்தவர்களை நான் கைது செய்வேன் - சீமான்
  • BREAKING-NEWS கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை
  • BREAKING-NEWS திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை வழக்கு: கொள்ளையன் முருகனை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க பெங்களூரு குற்றவியல் நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக பி.காளிராஜை நியமித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு

ராணுவ தின ஒத்திகை: கயிறு அறுந்து வீரர்கள் படுகாயம்

army-day-rehearsal-soldiers-fell-down-in-helicopter

டெல்லியில் இந்திய ராணுவ தின நிகழ்ச்சி ஒத்திகையின் போதும், கயிறு அறுந்து வீரர்கள் கிழே விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஆண்டு தோறும் ஜனவரி 15 ஆம் தேதி இந்திய ராணுவ தினம் அனுசரிக்கப்படுகிறது. நாட்டுக்காக உயர்நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஜனவரி 15 ஆம் தேதி இந்திய ராணுவ தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. டெல்லியில் இதற்கான நிகழ்ச்சி ஒத்திகையில், ராணுவ வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஒத்திகையின் போது மூன்று ராணுவ வீரர்கள் கயிறு அறுந்து கீழே விழுந்த வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

இந்த வீடியோவில் வீரர்கள், ஹெலிகாப்டரில் இருந்து கயிறு மூலம் கீழே குதிக்கும் சாகச நிகழ்ச்சியின் ஒத்திகையில் ஈடுபட்டனர். ஒவ்வொருவராக கயிறு மூலம் கிழே குதிக்க முயற்சிக்கும் போது திடீரென்று அந்த கயிறு அறுந்து விடுகிறது. இதனால் கயிற்றை பிடித்தபடியே இருந்த மூன்று வீரர்களும் கீழே விழுந்துவிடுகின்றனர். கீழே விழுந்த அவர்களுக்கு கை மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும், விபத்தில் காயமடைந்த அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close