[X] Close
JUST IN
  • BREAKING-NEWS எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கு தயாராக இருக்க மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு; சொந்த மாவட்டத்திலோ அல்லது 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்திலோ பணியாற்றும் அரசு அதிகாரிகளை பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய உத்தரவு
  • BREAKING-NEWS வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கடந்த 4 நாட்களில் 1 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்
  • BREAKING-NEWS பத்திரிகையாளர் கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீமிற்கு ஆயுள் தண்டனை விதிப்பு - பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு
  • BREAKING-NEWS திருச்சி: மணப்பாறை அருகே ஆவாரங்காடு ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 71பேர் காயம்
  • BREAKING-NEWS சென்னை வண்டலூர் பூங்காவில் காணும் பொங்கலை முன்னிட்டு 3 மணி நிலவரப்படி 40,000பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்
  • BREAKING-NEWS குஜராத்: அகமதாபாத்தில் வல்லபாய் படேல் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் திறப்பு

ஜிஎஸ்டி வரிக்கு நீதிகேட்டு விஷம் அருந்திய தொழிலதிபர்

uttarakhand-businessman-enters-bjp-office-after-consuming-poison-blames-gst-and-demonetisation

விஷம் அருந்திய நிலையில் உத்தரகாண்ட் பாஜக அலுவலகத்தில் நுழைந்த தொழிலதிபர், ஜிஎஸ்டியால் கடனாளி ஆனதாக கதறி அழுது பேசினார்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் முதலமைச்சர் திரிவேந்திர ராவட் தலைமையிலான பாஜக அரசு ஆட்சி செய்து வருகிறது. டேராடூன் நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் அமைச்சர் சுபோத் உனியல் மக்களின் குறைகளை இன்று கேட்டுக் கொண்டு இருந்தார். அப்போது ஹல்த்வானி பகுதியைச் சேர்ந்த பாண்டே என்ற தொழிலதிபர் அலுவலகத்திற்கு திடீரென நுழைந்தார். 

உள்ளே நுழைந்த அவர் மத்திய பாஜக அரசின் கொள்கைகளை கடுமையாக விமர்சித்து பேசினார். தனது பேச்சின் நடுவே விஷம் அருந்தியுள்ளதாக அவர் கூறியதால் அங்கிருந்த அனைவரும் பதற்றமானார்கள். உடனடியாக ஊடகங்களும் அவரது பேச்சை பதிவு செய்தார்கள். அவர் பேசுகையில், “அரசு என்னை பிரச்சனையில் சிக்க வைத்துவிட்டது. ரூபாய் நோட்டு ரத்து, ஜி.எஸ்.டி நடவடிக்கையால் நான் மிகுந்த கடனாளியாகி விட்டேன். கடந்த 5 மாதங்களாக அரசை அணுக முயற்சித்து வருகிறேன். ஆனால் முதலமைச்சரால் எந்தப் பயனும் இல்லை. அவர் யாருடைய குரலையும் கேட்பதில்லை. என்னைப்போல் பாதிக்கப்பட்டவர்கள் நிறையபேர் உள்ளனர். நான் இனிமேல் வாழமாட்டேன். நான் விஷமருந்தி உள்ளேன்” என்றார்.

பேசிக் கொண்டிருந்த போது அவர் அழுதது அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது. பாண்டே உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு ஐசியு வார்டில் சேர்க்கப்பட்டார். விஷம் அருந்தியது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. பாண்டே வாகனங்கள் வைத்து கடந்த 5 ஆண்டுகளாக தொழில் செய்து வந்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close