[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.77.43 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.56-ஆக விற்பனை
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி உயர்நீதிமன்ற கிளையில் வைகோ மனுதாக்கல்
  • BREAKING-NEWS காரைக்குடி- சென்னை செல்லும் பல்லவன் விரைவு ரயில் திருச்சி அருகே கிராப்பட்டியில் ரயிலின் என்ஜின் தடம் புரண்டு விபத்து
  • BREAKING-NEWS ஐபிஎல் கிரிக்கெட்: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி பேட்டிங்
  • BREAKING-NEWS அவசியம் இருந்தால் உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: புக்கத்துறையில் கனிஷ்க் கோல்டு நிறுவனத்தின் ரூ.48 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை
  • BREAKING-NEWS கிராம பஞ்சாயத்து ஊற்று போன்றது; கவனமின்றி இருந்ததால் சாக்கடை கலந்துவிட்டது - கமல்ஹாசன்

நடுவானில் மோதலில் ஈடுபட்ட ஆண் - பெண் விமானிகள் சஸ்பெண்ட்!

jet-airways-pilots-fight-mid-flight

ஜெட் ஏர்வேஸ் விமானத்தில், பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொள்ளா‌மல் விமானியும்-சக பெண் விமானியும், சண்டையிட்டுக் கொண்டதால் அவர்கள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

கடந்த ஒன்றாம் தேதி லண்டனில் இருந்து 324 பயணிகளுடன் மும்பை வந்த விமானத்தில், விமானி‌-சக பெண் விமானியை கன்னத்தில் அறைந்ததால் அவர் காக்பிட் அறை‌யை விட்டு கோபத்துடன் வெளியேறினார். 

மேலும், அவர் கண்ணீர் விட்டு கதறியதால் விமான பணியாளர்கள் செய்வதறியாது திகைத்ததுடன், பெண் விமானியை சமாதானம் செய்து காக்பிட் அறைக்கு அனுப்பினர். இந்நிலையில் விமானம் பாதுகாப்பாக மும்பையில் தரையிறங்கியதை அடுத்து, இது தொடர்பான விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. 

மேலும், விமான போக்குவரத்து துறை இயக்ககம் சக விமானியின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close