[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
  • BREAKING-NEWS தமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்
  • BREAKING-NEWS காவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது
  • BREAKING-NEWS சென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டு பற்றிய வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS நெஞ்சுவலி காரணமாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதி

மகாராஷ்டிராவை உலுக்கிய தலித் அமைப்புகளின் போராட்டம் வாபஸ்

massive-bandh-by-dalit-groups-in-maharashtra-called-off

மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் தீவிரமாக நடைபெற்ற தலித் அமைப்புகளின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

பீமா கோரேகாவ் போரின் 200வது ஆண்டு நினைவுத் தினத்தையொட்டி புனேயில் உள்ள போர் நினைவுச்சின்னம் அருகே ஜனவரி ஒன்றாம் தேதி திரளான தலித் மக்கள் திரண்டிருந்தனர். அதற்கு சில வலதுசாரி இயக்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து அவர்களை விரட்டியடித்தனர். மேலும் அந்நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், தலித் இளைஞர் ஒருவர் மரணம் அடைந்தார். பலர் காயமடைந்தனர். நூற்றுக்கணக்கான வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. 

        

இதனையடுத்து தாக்குதலை கண்டித்து தலித் மக்கள், தலித் கட்சிகள், அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் வெடித்தது. இதனால் மகாராஷ்டிரா முழுவதும் பதற்றம் ஏற்பட்டது.  குறிப்பாக மும்பை மற்றும் புனே பகுதியில் அதிக அளவில் போராட்டங்கள் நடைபெற்றன.

வன்முறை பரவுவதை தடுக்க மகாராஷ்டிரா முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சில இடங்களில் ரயில் மறியல் போராட்டமும், சாலை மறியல் போராட்டங்களும் நடைபெற்றன. சில இடங்களில் பேருந்துகள் மீது கல்வீச்சு தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறின.

           

இந்நிலையில், போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அம்பேத்கர் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் அறிவித்தார். இதனால் மாலை 4.30 மணி முதல் போராட்டம் கைவிடப்பட்டது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அம்பேத்கர், “நிறைய இந்துத்துவா அமைப்புகள் வகுப்புவாத பதற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறது. பீமா கோரேகான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ய வேண்டும். பந்த் அமைதியாக நடைபெற்றது. போராட்டத்திற்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. இது தலித் மக்களின் போராட்டம் மட்டுமல்ல; ஒடுக்கப்பட்ட எல்லா மக்களின் போராட்டம்தான்” என்றார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close