[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் புகார் கூறிய 4 மாணவிகளிடம் விசாரணை
  • BREAKING-NEWS தமிழக மக்களின் உரிமைகளை நசுக்கும் அரசாக மத்திய அரசு உள்ளது- கனிமொழி
  • BREAKING-NEWS பல்வேறு புகார்களுக்கு ஆளாகி உள்ள பன்வாரிலால் தமிழக ஆளுநராக நீடிப்பது அவமானம்- வைகோ
  • BREAKING-NEWS நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் மொபைல் ஆப்-ஐ அறிமுகம் செய்ய உள்ளோம் - ஜி.வி.பிரகாஷ்
  • BREAKING-NEWS கரிகாலன் என்ற அடைமொழியுடன் 'காலா' படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS பேராசிரியை நிர்மலா தேவியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சாத்தூர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனுதாக்கல்
  • BREAKING-NEWS பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் விசாரணைக்கு உதவ 2 பெண் அதிகாரிகள் நியமனம் - விசாரணை அதிகாரி சந்தானம்

மகாராஷ்டிராவில் தலித் மக்கள் மீது தாக்குதல்: முழு அடைப்பால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

maharashtra-protests-being-carried-out-in-the-state

மகாராஷ்டிராவில் தலித் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து, அம்மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கோரேகாவ் போரின் 200வது ஆண்டு நினைவுத் தினத்தையொட்டி புனேயில் உள்ள போர் நினைவுச்சின்னம் அருகே நேற்று முன் தினம் திரளான தலித் மக்கள் திரண்டிருந்தனர். அதற்கு சில வலதுசாரி இயக்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து அவர்களை விரட்டியடித்தனர். மேலும் அந்நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், தலித் இளைஞர் ஒருவர் மரணம் அடைந்தார். பலர் காயமடைந்தனர். நூற்றுக்கணக்கான வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதனால் மகாராஷ்டிரா முழுவதும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இதையொட்டி, பகுஜன் பீமா மகாசங் கட்சி சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. முழு அடைப்பு போராட்டம் காரணமாக புனே, மும்பை உள்ளிட்ட பகுதிகளில் பேருந்துகள் இயங்கவில்லை. வன்முறை பரவுவதை தடுக்க மகாராஷ்டிரா முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close