[X] Close
JUST IN
  • BREAKING-NEWS எம்.எல்.ஏக்களுக்கு உயர்த்தப்பட்டுள்ள ஊதியத்தை பெறப்போவதில்லை- டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: பாம்பன் அருகே சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது
  • BREAKING-NEWS பேருந்து கட்டண உயர்வுக்கு டீசல் விலை உயர்வை காரணம் காட்டுவதை ஏற்க முடியாது- வைகோ
  • BREAKING-NEWS பேருந்து கண்டன உயர்வை கண்டித்து தமிழகத்தில் ஜன.24இல் விசிக சார்பில் ஆர்ப்பாட்டம்
  • BREAKING-NEWS பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக ஜன.27 இல் திமுக நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் மதிமுக பங்கேற்கும்
  • BREAKING-NEWS பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து ஜன.24 ஆம் தேதி பாஜக போராட்டம் நடத்தும்-தமிழிசை
  • BREAKING-NEWS ஜன. 12 இல் ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழகத் தேர்வு நாளை மறுநாள் நடைபெறும்
இந்தியா 03 Jan, 2018 07:17 AM

லாலுவுக்கு தண்டனை விவரம் இன்று அறிவிப்பு

fodder-scam-case-sentencing-of-lalu-prasad-yadav-today

கால்நடைத் தீவன வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ள லாலுபிரசாத் உள்பட 15 பேருக்கு தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படுகிறது.

தியோஹர் அரசு கருவூலத்தில் இருந்து 89 லட்சம் ரூபாய் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட 2வது வழக்கு ராஞ்சியில் அமைக்கப்பட்ட சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கு தொடர்பான அனைத்து விசாரணைகளும் கடந்த 13ம் தேதி நிறைவடைந்தது. இந்த வழக்கில் 34 பேர் குற்றம்சாட்டப்பட்டிருந்த நிலையில், 11 பேர் உயிரிழந்தனர். ஒருவர் அப்ரூவர் ஆனார். இதனையடுத்து லாலு பிரசாத் உள்பட 15 பேர் குற்றவாளிகள் என கடந்த 23ம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது. பாட்னா அருகேயுள்ள பிர்ஸா முண்டா சிறைச்சாலையில் லாலு பிரசாத் அடைக்கப்பட்டுள்ளார். லாலு உள்ளிட்ட 15 பேருக்கான தண்டனை விவரத்தை நீதிபதி ஷிவ்பால் சிங் இன்று அறிவிக்கிறார்.

பீகார் முதலமைச்சராக லாலு பிரசாத் பதவி வகித்த காலத்தில் கால்நடைகளுக்காக வாங்கப்பட்ட தீவனத்தில் பலகோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. 1994-95-ஆம் ஆண்டுகளில் சைபாசா கருவூலத்தில் இருந்து 78 போலி ஒதுக்கீடு கடிதங்கள் பெற்று 37 கோடி ரூபாய் அளவில் பணம் எடுத்ததாக லாலு பிரசாத் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக லாலு பிரசாத் மீது 5 வழக்குகள் பதிவு செய்து சிபிஐ விசாரணை நடத்தியது. இவ்வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த 2013-ஆம் ஆண்டு லாலு பிரசாத் குற்றவாளி என தீர்ப்பளித்து. ஒருவழக்கில் மட்டும் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் அவர் சுமார் 10 ஆண்டுகள் தேர்தலில் நிற்க முடியாத சூழல் ஏற்பட்ட நிலையில் ஜாமீனில் வெளிவந்தார்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close