[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS ஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனம் ஆகும்; சோலைவனம் பாலைவனம் ஆகாது - தமிழிசை
  • BREAKING-NEWS 6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் - ஆனந்திபென் பட்டேல் உ.பிக்கு மாற்றம்
  • BREAKING-NEWS டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்

பாரில் ஏற்பட்ட பார்க்கிங்க் பிரச்னை: ஒருவருக்கு துப்பாக்கி சூடு

man-shot-outside-pub-in-new-delhi-s-greater-kailash-area-over-a-parking-spot

டெல்லியில் பார் ஒன்றில் ஏற்பட்ட பார்க்கிங் பிரச்னையின் போது ஒருவர் சுடப்பட்டார்.

தெற்கு டெல்லி கிரேட்டர் கைலாஷ் பகுதியில் உள்ள மதுபான பாரின் வாகன நிறுத்தும் இடத்தில் வினய் மற்றும் உமேஷ் குமார் என்பவர் இடையே இன்று அதிகாலை தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னை மோதலாக மாற, உமேஷ் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் வினயை சுட்டுள்ளார். இதில் கழுத்தில் பலத்த காயமடைந்த வினய், சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்தார். 

ரத்த வெள்ளத்தில் கிடந்த வினயை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் துப்பாக்கி சூடு நடத்திய உமேஷை அடித்து உதைத்து போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இதுதொடர்பாக உமேஷை கைது செய்துள்ள போலீஸார், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் மது அருந்தும் சொகுசு பார்கள் நல்லிரவு 1 மணியுடன் மூட வேண்டும் என்ற விதிமுறையை மீறி, அதிகாலை 3.30 வரை செயல்பட்ட பாரை சீல் வைக்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close