[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்
  • BREAKING-NEWS அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்

உ.பி.யில் 12 வயது சிறுவன் கொடூரக் கொலை

12-year-old-boy-murdered-by-6-men-in-up-police-suspect-revenge-killing

உத்தரப் பிரதேசத்தில் 12 வயது சிறுவனை 6 பேர் கொண்ட கும்பல் தாக்கி கொலை செய்துள்ளனர்.

உத்தரப் பிரதேசத மாநிலம் மட்னாபூர் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது.  12 வயது மதிக்கத்தக்க சிறுவனை 6 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக தாக்கியுள்ளனர். பின்னர் அந்த சிறுவனின் குரல்வளையை அறுத்து படுகொலை செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் கொலையாளிகளை தேடி வருகின்றனர். சிறுவனின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேதப் பரிசோதனை செய்ய மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுவதாவது, இச்சம்பவம் மட்னாபூர் காவல்நிலையத்திற்கு உட்பட்ட கிராமத்தில் அரங்கேறியுள்ளது. சிறுவன் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளான். அவனது உடலில் காயங்கள் இருந்தது. உயிரிழந்த சிறுவனின் சகோதரர் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்ணுடன் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. இதற்கு பழிவாங்கும் நோக்கில் கூட இந்த சம்பவம் நடைப்பெற்று இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

முன்னதாக உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த இரு சகோதரிகள் மரத்தில் தூக்கில் தொங்கியபடி நேற்று சடலமாக மீட்கப்பட்டனர். இதுகொலையா? தற்கொலையா என காவல்துறையில் விசாரித்து வரும் நிலையில் தற்போது இதுபோன்ற சம்பவம் அரங்கியுள்ளது. உ.பி.யில் கடந்த சில காலமாக பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான குற்றச்சம்பவம் நடைபெறுவது தொடர் கதையாகி வருகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close