[X] Close
JUST IN
 • BREAKING-NEWS ஹெச். ராஜாவும், தமிழிசையும் இணைந்து மெர்சல் படத்தை சூப்பர் ஹிட் ஆக்கிவிட்டனர்- நடிகர் விஷால்
 • BREAKING-NEWS நடிகர் கமல், ரஜினி, விஷால் ஆகிய மூவரும் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் - பிரகாஷ்ராஜ்
 • BREAKING-NEWS ஆண்டாள் சர்ச்சை தேவையற்றது- ஓ. பன்னீர் செல்வம்
 • BREAKING-NEWS ஒகி புயலால் காணாமல்போன மீனவர்களை தேடும்பணி நிறுத்தப்பட்டுள்ளது- அமைச்சர் நிர்மலா சீதாராமன்
 • BREAKING-NEWS வடலூர் வள்ளலார் தைப்பூச ஜோதி தரிசனத்தையொட்டி ஜன.31 இல் கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
 • BREAKING-NEWS நாகலாந்து, மேகாலாயா மாநிலங்களில் பிப்-27 ஆம் தேதியும், திரிபுரா மாநிலத்தில் பிப்-18 ஆம் தேதியும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும்- தேர்தல் ஆணையம்
 • BREAKING-NEWS ஜெ.சிகிச்சையின்போது உடன் இருந்த சசிகலாவுக்குத் தான் அனைத்து உண்மைகளும் தெரியும்- வைகோ
 • BREAKING-NEWS சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்கள் தொடர்ந்து 24வது நாளாக காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்
 • BREAKING-NEWS டெல்லியில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் பட்ஜெட்டுக்கு முந்தைய கூட்டத்தில் ஓபிஎஸ் பங்கேற்கிறார்
 • BREAKING-NEWS கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி 2வது நாளாக ஸ்ரீவில்லிபுத்தூரில் தொடர் உண்ணாவிரத போராட்டம்
 • BREAKING-NEWS 2016 டிசம்பர் 4ஆம் தேதி மாலை 5.15 மணிக்கே ஜெயலலிதா இறந்துவிட்டார் - திவாகரன்
 • BREAKING-NEWS கமலுடன் கூட்டணி வைப்பது பற்றி காலம்தான் பதில் சொல்லும் - ரஜினிகாந்த்
 • BREAKING-NEWS இந்திய அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது தென்னாப்ரிக்க அணி
 • BREAKING-NEWS கூடுதல் பணி செய்ய போக்குவரத்து தொழிலாளர்களை கட்டாயப்படுத்துதல், விடுமுறை தர மறுப்பதற்கு விஜயகாந்த் கண்டனம்
இந்தியா 27 Dec, 2017 08:08 AM

விடுமுறைக்கு பின் இன்று கூடுகிறது நாடாளுமன்றம்

parliament-winter-session

நான்கு நாள் விடுமுறைக்குப் பிறகு, நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூடுகிறது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 15 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மன்மோகன்சிங் குறித்து தெரிவித்த கருத்துக்கு பிரதமர் மோடி மன்னிப்பு கோர வேண்டுமென வலியுறுத்தி, கடந்த 22 ஆம் தேதி மாநிலங்களவையில் அமளி ஏற்பட்டது. குஜராத்‌ சட்டப்பேரவைத்தேர்தல் பரப்புரையின்போது பாலன்பூர் பகுதியில் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய மோடி, கடந்த 6 ஆம் தேதி மணிசங்கர் அய்யரின் வீட்டில் நடந்த இரவு விருந்தில் மன்மோகன்சிங் மற்றும் சில பாகிஸ்தான் அதிகாரிகள்‌ கலந்து கொண்டதாக கூறினார். குஜராத் தேர்தலில் பாரதிய ஜனதாவை தோல்வியடைய வைக்க பாகிஸ்தானுடன் சேர்ந்து சதி‌ நடப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

இது தொடர்பாக அறிக்கை மூலம் கடும் கண்டனத்தை தெரிவித்த மன்மோகன்சிங், தன் மீது அவமதிப்பான, தவறான குற்றச்சாட்டுகளை எல்லையற்ற கற்பனையோடு மோடி பேசியுள்ளது தனக்கு வருத்தமளிப்பதாக கூறியுள்ளார். இரவு விருந்தில் கலந்து கொண்டவர்கள் பட்டியலை வெளியிட்டவர், இந்த கூட்டத்தில் தேர்தல் குறித்து எதுவும் பேசப்படவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார். மேலும் குஜராத் தேர்த‌லில் பாஜக தோற்பதற்காக, பாகிஸ்தானுடன் இணைந்து சதி செய்வதாக தம்மீது கூறிய குற்றச்சாட்டுக்கு பிரதமர் மோடி மன்னிப்பு கோர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மன்மோகன்சிங் குறித்து தெரிவித்த கருத்துக்கு பிரதமர் மோடி மன்னிப்பு கோர வேண்டுமென வலியுறுத்தி மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனையடுத்து மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது. 4 நாள் விடுமுறைக்குப் பிறகு நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூடுகிறது. தொடர்ந்து இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடுவார்கள் எனத் தெரிகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close