[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மணிப்பூர் மாநிலத்தில் இந்தியா- மியான்மர் எல்லைப் பகுதியில் நிலநடுக்கம்- ரிக்டா அளவில் 4 ஆக பதிவு
  • BREAKING-NEWS யோகா பயிற்சியால் மன அமைதியை பெற முடியும், எதிர்காலத்தை கட்டமைக்க முடியும்- பிரதமர் நரேந்திர மோடி
  • BREAKING-NEWS வேதாரண்யம் பகுதியில் கடல்சீற்றம் காரணமாக 2 ஆவது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
  • BREAKING-NEWS யோகா அரசியலோ, மதம் சார்ந்த ஒன்றோ அல்ல; யோகா மக்கள் இயக்கமாக வேண்டும்- வெங்கையா நாயுடு
  • BREAKING-NEWS டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு
  • BREAKING-NEWS ஹாக்கியை தேசிய விளையாட்டாக அரசிதழில் வெளியிட வேண்டும் - ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் பிரதமருக்கு கடிதம்
  • BREAKING-NEWS போராடினாலே கைது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது - கமல் ஹாசன்

குஜராத்தில் பாஜகவின் புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு

new-bjp-government-to-take-oath-today

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பாரதிய ஜனதா கட்சியின் புதிய அமைச்சரவை இன்று பதவியேற்கிறது.

முதலமைச்சராக விஜய் ரூபானியும், துணை முதலமைச்சராக நிதின் படேலும் மீண்டும் பொறுப்பேற்றுக் கொள்கின்றனர். காந்திநகரில் நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பாரதிய ஜனதா தேசிய தலைவர் அமித் ஷா பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அமைச்சர், கட்சியின் மூத்த தலைவர்கள் மட்டுமின்றி மதத் தலைவர்களும் விழாவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக குஜராத் பாரதிய ஜனதா தலைவர் ஜிதுபாய் வகானி தெரிவித்துள்ளார். குஜராத்தில் தொடர்ந்து ஆறாவது முறையாக பாஜக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. 182 உறுப்பினர் கொண்ட குஜராத் சட்டப்பேரவையில், 99 இடங்களை பெற்று பாஜக வெற்றி பெற்றுள்ளது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் 77 இடங்களை கைப்பற்றியுள்ளது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close