[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS ஆதார் செல்லுமா ? செல்லாதா ? என்பது குறித்து உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு நாளை தீர்ப்பளிக்கிறது
  • BREAKING-NEWS சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுத்தது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS விநாயகர் சிலை ஊர்வலத்தில் பேசியதை நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்க ஹெச்.ராஜா எதிர்ப்பு
  • BREAKING-NEWS தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
  • BREAKING-NEWS உலகின் சிறந்த கால்பந்து வீரராக லூகா மோட்ரிச் தேர்வு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.13 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.36 காசுகளாகவும் விலை நிர்யம்

தந்தையை இழந்த 251 பெண்களுக்கு இலவச திருமணம் செய்து வைத்த தொழிலதிபர்

251-fatherless-girls-married-off-at-mass-wedding-in-surat

குஜராத்தில், தந்தையை இழந்த 251 பெண்களுக்கு தொழிலதிபர் ஒருவர் மிகவும் பிரமாண்டமாக திருமணம் செய்து வைத்துள்ளார்.

குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் மகேஷ் சவானி. கடந்த 5 ஆண்டுகளாக மிகவும் கஷ்டத்தில் இருக்கும் ஏழைப் பெண்களை பார்த்து அவர்களுக்கு திருமணம் நடத்திவைத்து வருகிறார். இந்நிலையில் தொடர்ச்சியாக ஆறாவது ஆண்டாகவும் தனது அந்த நற்செயலை அவர் தொடர்ந்துள்ளார். 6வது ஆண்டான இந்த வருடத்தில் தந்தையை இழந்த 251 பெண்களுக்கு அவர் திருமணம் செய்து வைத்திருக்கிறார்.

இதில் இந்து மதத்தினர் மட்டுமின்றி கிறிஸ்தவர், இஸ்லாமிய மதங்களை சேர்ந்த பெண்களும் அடங்குவார்கள். 251 பெண்களில் ஒருவர் மாற்றுத்திறனாளி ஆவார். திருமணத்தை நடத்தி வைத்ததோடு மட்டுமின்றி ஒவ்வொரு பெண்ணுக்கு தலா 5 லட்சம் ரூபாய் செலவில் சீர்வரிசைகளையும் தொழிலதிபர் மகேஷ் சவானி வழங்கியுள்ளார். தந்தை இழந்து பணம் இல்லாமல் கஷ்டப்படும் பெண்களுக்கு திருமணம் செய்துவைப்பதன் மூலம் தனக்கு மிகுந்த மனநிறைவு ஏற்படுவதாக அவர் கூறியுள்ளார்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close