[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 25 நாள் வேலை நிறுத்தத்திற்கு பிறகு சிவகாசி பட்டாசு ஆலைகளில் மீண்டும் உற்பத்தி தொடங்கியது
  • BREAKING-NEWS எம்.எல்.ஏக்களுக்கு உயர்த்தப்பட்டுள்ள ஊதியத்தை பெறப்போவதில்லை- டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: பாம்பன் அருகே சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது
  • BREAKING-NEWS பேருந்து கட்டண உயர்வுக்கு டீசல் விலை உயர்வை காரணம் காட்டுவதை ஏற்க முடியாது- வைகோ
  • BREAKING-NEWS பேருந்து கண்டன உயர்வை கண்டித்து தமிழகத்தில் ஜன.24இல் விசிக சார்பில் ஆர்ப்பாட்டம்
  • BREAKING-NEWS பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக ஜன.27 இல் திமுக நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் மதிமுக பங்கேற்கும்
  • BREAKING-NEWS பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து ஜன.24 ஆம் தேதி பாஜக போராட்டம் நடத்தும்-தமிழிசை
இந்தியா 24 Dec, 2017 08:43 AM

காஷ்மீரில் 50 ஆண்டுகள் கழித்து மணியோசையுடன் கிறிஸ்துமஸ்

bell-rings-in-kashmir-church-after-50-years

ஜம்மு காஷ்மீரில் உள்ள ஒரு கிறிஸ்துவ தேவாலயம் 50 ஆண்டுகள் கழித்து மணியோசையுடன் கிறிஸ்துமஸை கொண்டாடவுள்ளது.

ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒரு அழகான பிரதேசம். ஆனால் காஷ்மீர் என்றவுடன் நமக்கு நினைவில் வருவது கலவரம், வன்முறை, ராணுவம், போர், துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தான். நாம் தினசரி செய்திகளில் படிக்கும், கேட்கும் தகவல்கள் தான் நமது நினைவில் நிற்கின்றன. காஷ்மீரிலும் பல்வேறு மதங்களை சேர்ந்த மக்கள் உள்ளனர். அவர்கள் தங்கள் பண்டிகைகளை எவ்வாறு கொண்டாடுகின்றன. இந்த நாட்கள் எல்லாம் அவர்களுக்கு எவ்வாறு நகர்கின்றன. நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடவுள்ள நிலையில் நாடு எங்கும் உள்ள கிறுஸ்துவர்கள் தங்கள் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.

விதவிதமாக ஸ்டார், கிறிஸ்துமஸ் மரம், குடில் போன்ற பல்வேறு வண்ணமயமான பொருட்களைக் கொண்டு வழக்கமான உற்சாகத்துடன் கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளை அலங்கரித்துள்ளனர். காஷ்மீரில் உள்ள கிறிஸ்துவர்கள் எப்படி கிறிஸ்துமஸை கொண்டாடுகிறார்கள். ஜம்மு காஷ்மீரில் மொத்தமாக 5 கிறிஸ்த்துவ தேவாலயங்கள் உள்ளன. ஸ்ரீநகரில் மொத்தமாக 200க்கும் குறைவான கிறிஸ்துவர்களே உள்ளனர்.

ஸ்ரீநகரில் 121 ஆண்டுகள் பழமையான தேவாலயம் இந்த கிறிஸ்துமஸ் தினத்தில் ஒரு வரலாற்று நிகழ்வுக்கு காத்திருக்கிறது. பிரிட்டிஷார் காலத்தில் கட்டப்பட்ட இந்த தேவாலயத்தின் ஒரு பகுதி கடந்த 1967ஆம் ஆண்டு எரிந்தது. இதனையடுத்து அந்த தேவாலயத்தில்  அமைக்கப்பட்டிருந்த மணியை அகற்றியுள்ளனர். இந்த வருடம் அக்டோபர் மாதம் தான் 105 கிலோ எடை கொண்ட மணியை நிறுவியுள்ளனர். கடந்த 49 ஆண்டுகளாக இந்த தேவாலயம் மணியோசை இல்லாமல் கிறிஸ்துமஸை கொண்டாடி வந்தது. தற்போது 50 ஆண்டுகள் கழித்து மணியோசையுடன் கிறிஸ்துமஸை கொண்டாடவுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close