[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்
  • BREAKING-NEWS ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS திமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு
  • BREAKING-NEWS சென்னையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

காதலியை துப்பாக்கியால் சுட்ட காதலன்: கொள்ளையர்கள் தாக்கியதாக நாடகம்

man-shoots-at-girlfriend-s-leg-both-cook-up-robbery-tale

காதலியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு கொள்ளையர்கள் சுட்டதாக காதலனும், காதலியும் நாடகமாடய சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது.

டெல்லியை சேர்ந்த காதலர்கள் பியா மல்கோத்ரா, பன்டி குரோவர். கடந்த ஞாயிற்றுக்கிழமை காவல்நிலையம் சென்ற பன்டி குரோவர் தனது காதலியை நான்கு பேர் கொண்ட கும்பல் தாக்கியதாக கூறியுள்ளார். இதுகுறித்து பியாவிடம் காவலர்கள் விசாரித்தபோது, தனது காதலர் பன்டி குரோவர் மற்றும் அவரது நண்பருடன் ஒரு பிறந்தநாள் விழாவுக்கு சென்றுவிட்டு திரும்பியதாகவும், வரும் வழியில் நான்கு பேர் கொண்ட கும்பல் தங்களை வழிமறித்து கொள்ளையில் ஈடுபட்டதாகவும் அப்போது ஒருவன் மல்கோத்ராவின் காலில் துப்பாக்கியால் சுட்டதாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து காவலர்கள் பியா மல்கோத்ரா சுடப்பட்டதாக சொன்ன பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில் எந்த துப்பும் கிடைக்கவில்லை. இரண்டு நாட்களாக கொள்ளையர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் குரோவரை சம்பவம் நடந்ததாக கூறப்படும் இடத்திற்கு தங்களை அழைத்து செல்லுமாறு காவலர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இதுகுறித்து அவர்களிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. பிறகு மூன்று பேரிடமும் காவல்துறையினர் தனித்தனியே விசாரணை மேற்கொண்டனர். அப்போது மூவரும் சொன்ன பதில் முன்னுக்கு பின் முரணாக இருந்துள்ளது. காவல்துறையினரின் கிடுக்கிபிடி விசாரணையில் நடந்த சம்பவத்தை அவர்கள் தெரிவித்துள்ளனர்.

குரோவரும், பியாவும் காதலர்கள். குரோவர், பெண் ஒருவரை கொலை செய்ய முயன்றதாக கைது செய்யப்பட்டு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தான் ஜாமீனில் வெளிவந்துள்ளார். சிறையில் அவருக்கு தியாகி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் குரோவரும், தியாகியும் சனிக்கிழமை அன்று டெல்லியில் உள்ள சுதர்தன் பூங்கா பகுதியில் மது அருந்தியுள்ளனர். அப்போது மதுபோதையில் இருந்த குரோவருக்கும், பியாவுக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. பியாவுக்கு, குரோவர் மது அருந்துவது பிடிக்காததால் அவனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காதலன் தனது நண்பர் வைத்திருந்த துப்பாக்கியால் பியாவின் காலில் சுட்டுள்ளான். காயமடைந்த பியாவை அவனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளான். பியாவை பரிசோதித்த மருத்துவர்கள் குண்டு காயம் இருப்பதால் சிகிச்சை அளிக்க மறுத்துள்ளனர். இதனையடுத்து மூவரும் கூடி பேசி இந்த கொள்ளை கதையை தயாரித்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close