[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தருமபுரி: நல்லம்பள்ளி, ஏரியூர், பெரும்பாலை, கம்பை நல்லூர் பகுதியில் லேசான நில அதிர்வு
  • BREAKING-NEWS ஜம்மு- காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS சென்னை கந்தன்சாவடியில் கட்டட சாரம் சரிந்து விழுந்தது தொடர்பாக பொறியாளர்களிடம் விசாரணை
  • BREAKING-NEWS சென்னை: தனியார் மருத்துவமனை கட்டடத்தின் சாரம் சரிந்து விழுந்ததில் தொழிலாளி பலி, 28பேர் காயம்
  • BREAKING-NEWS சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.63 அடியில் இருந்து 116.98 அடியை தாண்டியது
  • BREAKING-NEWS சேலம்: ஓமலூர், கமலாபுரம், மேச்சேரி பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது
  • BREAKING-NEWS புதுக்கோட்டை: ஆதனக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 மாணவர்களிடையே மோதல்

12 அடி மலைப்பாம்பை அசாத்தியமாக பிடித்த ஆசிரியர்

12-foot-python-scares-allahabad-college

அலகாபாத் கல்லூரியில் நுழைந்த 12 அடி மலைப்பாம்பை, தாவரவியல் ஆசிரியர் ஒருவர், தைரியமாக பிடித்து அனைவரையும் திகைக்க வைத்துள்ளார். 

அலகாபாத்தில் உள்ள ஷியாமா பிரசாத் முகர்ஜி அரசு கல்லூரி ஒன்றில் 12 அடி மலைப்பாம்பு ஒன்று நுழைந்துள்ளது. இதனைக் கண்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அச்சத்தில் ஓடியுள்ளனர். அதன் பின்பு மலைப்பாம்பை பிடிக்க வனத்துறையினருக்கு கல்லூரி நிர்வாகம் தரப்பில் தகவலும் கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அந்த கல்லூரியில் தாவரவியல் துறையில் உள்ள மூத்த ஆசிரியர் ஒருவருக்கு மாணவர்கள் தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த, என்.பி சிங் என்ற அந்த ஆசிரியர், கல்லூரி வளாகத்தில் சுற்றித் திரிந்த மலைப்பாம்பை வெறும் கையால் அசாத்தியமாக பிடித்துள்ளார். ஆசிரியரால் பிடிக்கப்பட்ட அந்த மலைப்பாம்பு 40 கிலோ எடைக்கொண்டது. பாம்பை பாதுகாப்பாக பிடித்த ஆசிரியர், அதை உயிருடன் வனத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளார். ஆசிரியர் சிங், மலைப்பாம்பை பிடித்த வீடியோ தற்போது இணையத்தில் அதிக பரவி வருகிறது. மேலும் தைரியத்துடன் செயல்பட்ட ஆசிரியர் சிங்குக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close