[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்
  • BREAKING-NEWS நீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS முதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு
  • BREAKING-NEWS குண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.22 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.69 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு
  • BREAKING-NEWS டெல்லியில் தசரா விழா கோலாகலம்... குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி பங்கேற்பு...

ராகுலுக்கு போட்டியாக தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிப்பா?

congress-leader-claims-he-had-filed-nomination-against-rahul-gandhi-but-was-rejected

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் ராகுல் காந்தியை எதிர்த்து தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் ராகுல் காந்தியை எதிர்த்து தாக்கல் செய்த தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான இஸ்லாமியர் அயூப் அலி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசியுள்ள அவர், காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட கடந்த வியாழக்கிழமை தான் முறைப்படி விண்ணப்பித்ததாகவும், ஆனால் காரணமின்றி தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். அத்துடன் பாஜக கூறுவது போல காங்கிரஸ் குடும்பக் கட்சி தான் என்பது உண்மையாகிவிடும் போல எனவும் அவர் விமர்சித்துள்ளார். மேலும் காங்கிரஸ் தலைவருக்கான தேர்தலை நடத்தியவர்கள் அனைவரும் ராகுல் காந்திக்கே ஒருதலை பட்சமாக செயல்பட்டதாகவும் அவர் குறை கூறியுள்ளார். 

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். டெல்லி அக்பர் சாலையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் ராகுல் காந்தியின் வேட்புமனுவை சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் முன்மொழிந்தனர். அத்துடன் காங்கிரஸ் கட்சியின் 89 பேர் ராகுல் காந்திக்காக வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இருப்பினும் ஒருவர் கூட ராகுல் காந்தியை எதிர்த்து வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்று காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close