[X] Close
JUST IN
 • BREAKING-NEWS டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
 • BREAKING-NEWS சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் வரும் 26ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ரசிகர்களை சந்திக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்
 • BREAKING-NEWS இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் 16 பேர் முதற்கட்டமாக விடுதலை
 • BREAKING-NEWS ஒகி புயலால் கடலில் சிக்கிய தமிழக மீனவர்கள் 433 பேரை காணவில்லை: உள்துறை அமைச்சகம்
 • BREAKING-NEWS எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான புகார்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க உச்சநீதிமன்றம் அனுமதி
 • BREAKING-NEWS ராஜஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்ட ஆய்வாளர் பெரியபாண்டியனின் உடல் சென்னை வந்தது
 • BREAKING-NEWS திருச்செந்தூர் முருகன் கோயிலில் வள்ளி குகை அருகே பிரகார மண்டபம் இடிந்ததில் பெண் ஒருவர் பலி
 • BREAKING-NEWS ஜிஷா கொலை வழக்கில் குற்றவாளி அமிருல் இஸ்லாமிற்கு தூக்கு தண்டனை- எர்ணாகுளம் நீதிமன்றம்
 • BREAKING-NEWS ஜெ. மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் தீபக் ஆஜர்
 • BREAKING-NEWS விஏஓ தேர்விற்கு கன்னியாகுமரி மக்கள் விண்ணப்பிக்க காலநீட்டிப்பு செய்வது பற்றி பரிசீலிக்கப்படும் - அமைச்சர் ஜெயக்குமார்
 • BREAKING-NEWS ‘ஐஎன்எஸ் கல்வாரி’ என்ற நீர்மூழ்கிக் கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு
 • BREAKING-NEWS பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் குளிக்க 14 வது நாளாக தடை விதிப்பு
 • BREAKING-NEWS குஜராத் மாநிலத்தில் 2 வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
 • BREAKING-NEWS வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க 2018 மார்ச் 31ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு
இந்தியா 27 Nov, 2017 12:53 PM

ஜெ. வாரிசு என உரிமை கோரிய மனு தள்ளுபடி!

bengaluru-woman-who-claims-jayalalithaa-s-daughter-case-dismissed-by-supreme-court

ஜெயலலிதா மகள் என தன்னை அறிவிக்க கோரி பெங்களூரு பெண் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. 

ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு நாள் அடுத்த வாரம் வரவுள்ள நிலையில், பெங்களூருவை சேர்ந்த மஞ்சுளா என்ற அம்ருதா, தன்னை ஜெயலலிதாவின் மகள் என அறிவிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அத்துடன் தனக்கு டி.என்.ஏ பரிசோதனை செய்யவும் அவர் வழக்கில் கேட்டுக்கொண்டுள்ளார். டி.என்.ஏ பரிசோதனைக்காக மறைந்த ஜெயலலிதாவின் உடலையும் மெரினாவில் இருந்து தோண்டி எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

ஜெயலலிதாவின் பெயருக்கு களங்கம் விளைவிக்கக்கூடாது என்பதால் இத்தனை வருடங்கள் உண்மையை கூறவில்லை என்றும், தனது வளர்ப்புத் தந்தை கடந்த மார்ச் மாதம் இறந்துவிட்டதால் தற்போது உண்மையை கூறுவதாகவும் வழக்கில் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் வைஷ்ணவ ஐயங்கார் பிராமண முறைப்படி ஜெயலலிதாவுக்கு இறுதிச்சடங்கு செய்யவேண்டும் எனவும் அம்ருதா கேட்டுக்கொண்டுள்ளார். அம்ருதாவின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த மனுவை பெங்களூர் நீதிமன்றத்தில் அம்ருதா தாக்கல் செய்யலாம் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

ஏற்கனவே ஜெயலலிதாவின் மகன் என கூறி ஒருவர் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close