[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்காது- முதலமைச்சர்
  • BREAKING-NEWS டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்தார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தார்மீக அடிப்படையில் திமுக முழு ஆதரவு- ஸ்டாலின்
  • BREAKING-NEWS கோவை: ஆழியார் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்ட உள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS சத்தீஸ்கர்: தான்டேவாடா- பிஜாப்பூர் எல்லைப்பகுதியில் நடந்த என்கவுன்டரில் 7 மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 18,19 ஆம் தேதி டெல்லியில் நடக்கிறது
  • BREAKING-NEWS புதிய தலைமைச்செயலகம் கட்டியதில் முறைகேடுகள் நடந்திருந்தால் லஞ்ச ஒழிப்புதுறை விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கலாமே?- உயர்நீதிமன்றம்

ராமர் கோயில் கட்டும் பணிகள் 2018-ல் துவங்கும்: விஹெச்பி தலைவர் பேச்சு

ram-temple-construction-would-begin-in-october-2018-says-vhp-leader

அடுத்த ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதி ராமர் கோயில் கட்டும் பணிகள் துவங்கும் என்று விஹெச்பி தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஹெச்பி-ன் அகில உலக இணை செயலாளர் சுரேந்திர குமார் ஜெயின் பேசும்போது, அக்டோபர் 18, 2018-ல் ராமர் கோயில் கட்டும் பணிகள் துவங்கும். கட்டப்பட உள்ள ராமர் கோயிலின் நிர்வாகி கண்டிப்பாக ஒரு இந்துவாகத் தான் இருக்க வேண்டும் என்று கூறினார்.

2 நாட்களுக்கு முன்னதாக அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், அயோத்தியில் கொட்டப்பட்டுள்ள கற்கள் அனைத்தும் ராமர் கோயில் கட்ட மட்டுமே பயன்படுத்தப்படும். அந்த இடத்தில் வேறு எந்த கட்டடமும் கட்டப்பட மாட்டாது என்று கூறினார். விஹெச்பி ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள இந்து இயக்கங்களின் தலைவர்கள் பல்வேறு சர்ச்சைக்குறிய கருத்துக்களை கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close