[X] Close
JUST IN
 • BREAKING-NEWS உடல்நலன் கருதி அரசியலில் இருந்து விலக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி முடிவெடுத்திருப்பதாக தகவல்
 • BREAKING-NEWS ராஜஸ்தானில் கொள்ளையன் நாதுராமின் கூட்டாளிகள் 4 பேர் கைது
 • BREAKING-NEWS வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்படும் செல்போன், டிவிக்கான சுங்கவரி 10% இருந்து 20% உயர்வு- மத்திய அரசு
 • BREAKING-NEWS அரசின் நலத்திட்டங்களுக்கு ஆதார் எண்ணை இணைக்க 2018 மார்ச் 31 வரை அவகாசம்- உச்சநீதிமன்றம்
 • BREAKING-NEWS கடலூரில் ஆய்வு மேற்கொள்ள சென்ற ஆளுநர் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் கருப்புக்கொடி ஏந்தி பேரணி
 • BREAKING-NEWS பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் குளிக்க 15வது நாளாக தடை விதிப்பு
 • BREAKING-NEWS திருவாரூர், நாகை, புதுச்சேரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது
 • BREAKING-NEWS அனைத்து விவசாய சங்கங்கள் சார்பில் கன்னியாகுமரியில் இன்று முழு அடைப்பு போராட்டம்
 • BREAKING-NEWS டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
 • BREAKING-NEWS சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் வரும் 26ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ரசிகர்களை சந்திக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்
 • BREAKING-NEWS இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் 16 பேர் முதற்கட்டமாக விடுதலை
 • BREAKING-NEWS ஒகி புயலால் கடலில் சிக்கிய தமிழக மீனவர்கள் 433 பேரை காணவில்லை: உள்துறை அமைச்சகம்
 • BREAKING-NEWS எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான புகார்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க உச்சநீதிமன்றம் அனுமதி
 • BREAKING-NEWS ராஜஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்ட ஆய்வாளர் பெரியபாண்டியனின் உடல் சென்னை வந்தது
இந்தியா 26 Nov, 2017 08:50 AM

இந்துக்கள் 4 குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும்: ஹரித்வார் மடாதிபதி பேச்சால் சர்ச்சை!

hindus-should-beget-4-children-till-uniform-civil-code-is-implemented-haridwar-seer

இந்துக்கள் குறைந்தது 4 குழந்தைகளையாவது பெற்றுக்கொள்ள வேண்டும் என்று  ஹரித்வார் பாரத் மாதா கோயிலைச் சேர்ந்த மடாதிபதி கோவிந்த தேவ் கிரிஜி மகராஜ் கூறினார். இவரது பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கர்நாடக மாநிலம் உடுப்பியில் ஆர்.எஸ்.எஸ், விஸ்வ இந்து பரிஷத் ஆகிய அமைப்புகளின் சார்பில் மாநாடு ஒன்று நடந்துவருகிறது. ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் உட்பட பலர் கலந்துகொண்டுள்ள இம்மாநாட்டில் ஹரித்வார் பாரத் மாதா கோயிலைச் சேர்ந்த மடாதிபதி கோவிந்த தேவ் கிரிஜி மகராஜும் கலந்துகொண்டார். 

அவர்  பேசும்போது, ‘இந்து மக்கள் தொகை குறைந்த இடங்களில் தங்கள் பகுதிகளை இழந்துள்ளோம். இனியும் அது தொடரக்கூடாது. அதனால், இந்துக்கள் நான்கு குழந்தைகளையாவது பெற்றுக்கொள்ள வேண்டும். நாடு முழுவதும் ஒரே சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் வரை, இதை தொடர வேண்டும். இரண்டு குழந்தை சட்டம், இந்துக்களை கட்டுப்படுத்தக் கூடாது. பசு பாதுகாவலர்கள் அமைதியை விரும்புவர்கள். ஆனால், குற்றப் பின்னணி உடைய சிலர் இந்த அமைப்பின் பெயரை தவறாக பயன்படுத்தி, குற்றச் செயல்களை செய்கின்றனர். தங்கள் சொந்த பிரச்னைகளை தீர்த்துக் கொள்ள பசு பாதுகாவலர்கள் என்ற பெயரை பயன்படுத்துகின்றனர்’ என்றார். இவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close