[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வடக்கு அந்தமான், கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 12 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS பணத்திற்காக வாக்களிப்பது தன்னைத்தானே விற்பதற்கு சமம்: வைகோ
  • BREAKING-NEWS பாஜக நோட்டுகள், டோக்கன்களை தந்து வாக்கு கேட்காது; திட்டங்களை தந்து மட்டுமே வாக்கு கேட்கும் - தமிழிசை
  • BREAKING-NEWS நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா!
  • BREAKING-NEWS பெண்கள் கரும்பல்ல; இரும்பு என்பதை நிரூபிக்கும் காலம் வந்துவிட்டது! - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.22 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

பணமோசடியில் ஜாமீன் பெறுவதற்கான கடும் நிபந்தனைகள் நீக்கம்

supreme-court-remove-conditions-for-bail

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், ஜாமீன் வழங்கப்படுவதற்கு இருந்த கடும் நிபந்தனைகளை உச்சநீதிமன்றம் நீக்கியுள்ளது.

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் நபர், ஜாமீன் கோரும் போது, அவர் மீது குற்றம் புரிந்ததற்கான முகாந்திரம் இருப்பதாக அரசு வழக்கறிஞர் கருதினால் ஜாமீன் வழங்கப்பட மாட்டாது. கடந்த 2009ஆம் ஆண்டு பணமோசடி தடுப்புச் சட்டத்தில் மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தில் இந்த கடுமையான பிரிவு சேர்க்கப்பட்டது. இதனால், பணமோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்படும் நபர்களுக்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. 

இந்நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதி ரோஹிண்டன் நாரிமன் தலைமையிலான அமர்வு, தற்போது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கடும் நிபந்தனைகளை நீக்கி உத்தரவிட்டுள்ளது. இந்த சட்டப்பிரிவின் காரணமாக கைது செய்யப்பட்டவருக்கு சிறை உறுதி என்பதும், எளிதில் ஜாமீன் கிடைப்பது இல்லை என்பதும் சட்டத்திற்கு எதிராக இருப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் தனிமனித உரிமையில் தலையிடும் வண்ணம் இந்த சட்டப்பிரிவு இருப்பதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு மத்திய அரசுக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close