[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆளுநரின் ஆய்வு அவரது அதிகாரத்துக்கு உட்பட்டது
  • BREAKING-NEWS தூத்துக்குடி அருகே கடலில் நாட்டுப்படகு பழுதாகி மூழ்கியதில் மீனவர் கென்னடி உயிரிழப்பு
  • BREAKING-NEWS நீர்மட்டம் குறைந்ததால் வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு நீர் திறக்கப்படுவது நிறுத்தப்பட்டது
  • BREAKING-NEWS பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் நீர்வரத்து சீராகாததால் 16வது நாளாக குளிக்க தடை விதிப்பு
  • BREAKING-NEWS அண்ணா அறிவாலயத்திற்கு திமுக தலைவர் கருணாநிதி வருகை
  • BREAKING-NEWS டிடிவி தினகரன் யார்?, கட்சியின் அடிப்படை உறுப்பினராக கூட இல்லை: முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS ஆர்.கே.நகரில் திமுக வேட்பாளரை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பரப்புரை
  • BREAKING-NEWS ஆர்.கே.நகரில் திமுக வேட்பாளரை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பரப்புரை
  • BREAKING-NEWS உடல்நலன் கருதி அரசியலில் இருந்து விலக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி முடிவெடுத்திருப்பதாக தகவல்
  • BREAKING-NEWS ராஜஸ்தானில் கொள்ளையன் நாதுராமின் கூட்டாளிகள் 4 பேர் கைது
  • BREAKING-NEWS வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்படும் செல்போன், டிவிக்கான சுங்கவரி 10% இருந்து 20% உயர்வு- மத்திய அரசு
  • BREAKING-NEWS அரசின் நலத்திட்டங்களுக்கு ஆதார் எண்ணை இணைக்க 2018 மார்ச் 31 வரை அவகாசம்- உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS கடலூரில் ஆய்வு மேற்கொள்ள சென்ற ஆளுநர் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் கருப்புக்கொடி ஏந்தி பேரணி
  • BREAKING-NEWS பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் குளிக்க 15வது நாளாக தடை விதிப்பு
இந்தியா 23 Nov, 2017 07:54 PM

இந்திய கடற்படையின் முதல் பெண் விமானி

india-s-1st-women-naval-pilot

இந்தியாவின் முதல் கடற்படை பெண் விமானியாக உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த சுபாங்கி ஸ்வரூப் தேர்வாகியுள்ளார்.

இந்திய கடற்படையில் இதுவரை ஆண் விமானிகள் மட்டுமே பணியாற்றி வந்தனர். இந்நிலையில் கடற்படையின் முதல் விமானி என்ற பெருமையை சுபாங்கி பெற்றுள்ளார். உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த சுபாங்கியின் தந்தையும் கடற்படையில் கமாண்டராக பணியாற்றிவர். இந்நிலையில் தனது மகள் கடற்படை விமானியாக தேர்வாகியதன் மூலம், கனவு நிறைவேறிவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். சுபாங்கிக்கு, ஹைதராபாத்தில் உள்ள விமானப்படைத்தளத்தில், ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையை சேர்ந்த விமானிகள் பயிற்சி அளிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று இந்திய கடற்படையின் ஆயுத ஆய்வாளர்களாக முதல்முறையாக 3 பெண்கள் தேர்வாகியுள்ளனர். புதுடெல்லியை சேர்ந்த ஆஸ்தா சேகால், புதுச்சேரியை சேர்ந்த ரூபா, கேரளாவை சேர்ந்த சக்தி மாயா ஆகிய மூவரும் இந்த பெருமையை பெற்றுள்ளனர். இவர்கள் கடற்படையில் ஆயுதம் மற்றும் தகவல் பிரிவில் ஆய்வாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவின் அனைத்து துறைகளிலும் சாதித்து வரும் பெண்கள் தற்போது கடற்படையிலும் சாதனையைத் தொடங்கியுள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close