[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வடக்கு அந்தமான், கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 12 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS பணத்திற்காக வாக்களிப்பது தன்னைத்தானே விற்பதற்கு சமம்: வைகோ
  • BREAKING-NEWS பாஜக நோட்டுகள், டோக்கன்களை தந்து வாக்கு கேட்காது; திட்டங்களை தந்து மட்டுமே வாக்கு கேட்கும் - தமிழிசை
  • BREAKING-NEWS நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா!
  • BREAKING-NEWS பெண்கள் கரும்பல்ல; இரும்பு என்பதை நிரூபிக்கும் காலம் வந்துவிட்டது! - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.22 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

இளம்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: ராணுவ அதிகாரி கைது

army-colonel-arrested-for-allegedly-raping-his-junior-s-daughter

சிம்லாவில் ராணுவ அதிகாரி ஒருவர் தனக்கு உதவியாக பணிபுரியும் அதிகாரியின் மகளை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிம்லாவில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் ராணுவ அதிகாரியாக பணியும் அதிகாரி ஒருவர், தனக்கு கீழ் பணியாற்றும் அதிகாரி மற்றும் அவரின் மகளை (வயது 21) ஒரு விருந்து நிகழ்ச்சிக்கு அழைத்துள்ளார். அப்போது அந்தப் பெண் அந்த அதிகாரியிடம், தான் மாடல் அழகியாக மாற வேண்டும் என்பதே தனது விருப்பம் என கூறியிருக்கிறார். இதனையடுத்து அப்பெண்ணின், புகைப்படத்தையும், செல்போன் எண்ணையும் அந்த அதிகாரி பெற்றுக்கொண்டார். அடுத்த நாள், அப்பெண்ணை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட அந்த அதிகாரி, வீட்டிற்கு வா.. மாடல் துறையில் உள்ளவர்களுடன் அறிமுகம் கொடுக்கிறேன் என்றிருக்கிறார். அந்தப் பெண்ணும் அதனை நம்பி செல்ல, அந்த அதிகாரி தனது வீட்டிக்குள் வைத்து அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இதுகுறித்து வெளியே சொன்னால், தந்தையின் வேலையை இல்லாமல் ஆக்கிவிடுவேன் எனவும் மிரட்டியிருக்கிறார்.

ஆனால் பாதிக்கப்பட்ட பெண் தைரியமாக இதுகுறித்து போலீசில் புகார் தெரிவித்ததால், அந்த அதிகாரியை போலீசார் கைது செய்தனர். பாலியல் வன்கொடுமையில் சிக்கியவர் ராணுவ அதிகாரி என்பதால், அவரின் பெயரை போலீசார் வெளியே தெரிவிக்கவில்லை. ராணுவ அதிகாரியே இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close