[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு சட்டப்படி தண்டனை வழங்கப்படும் - தலைமை நீதிபதி
  • BREAKING-NEWS போலி பயிற்சியாளர் ஆறுமுகம் பகீர் வாக்குமூலம்
  • BREAKING-NEWS ஒப்பந்ததாரரின் இடங்களில் 174 கோடி பணம், 105 கிலோ தங்கம் பறிமுதல்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்குகிறது
  • BREAKING-NEWS கோப்பையுடன் வந்த வீரர்களை உற்சாகமாய் வரவேற்ற பிரான்ஸ்
  • BREAKING-NEWS 100 கிலோ தங்கம், ரூ.160 கோடி பணம் பறிமுதல்; ஒப்பந்ததாரரின் வீட்டில் தொடரும் சோதனை
  • BREAKING-NEWS கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு

'உலக அழகி'-க்கு பிரதமர் மோடி வாழ்த்து

modi-wishes-miss-world-manushi-chhillar

உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ள இந்தியப் பெண் மனுஷி ஷில்லாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சீனாவின் சான்யா நகரில் நடைபெற்ற 2017ஆம் ஆண்டுக்கான உலக அழகிப் போட்டியில், உலகம் முழுவதும் இருந்து 130 அழகிகள் பங்கேற்றனர். இதில் இந்தியாவின் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த மனுஷி ஷில்லார் வெற்றி பெற்றுள்ளார். 1997ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் தேதி பிறந்த இவருக்கு தற்போது 20 வயதாகிறது. 

மனுஷி ஷில்லார், கடந்த ஜூன் மாதம் இந்திய அழகிப் பட்டத்தை வென்றார். தற்போது உலக அழகியாக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பெண் ஒருவர் மீண்டும் உலக அழகியாக தேர்வு
செய்யப்பட்டுள்ளார். கடந்த 2000ல் இந்தியாவை சேர்ந்த ப்ரியங்கா சோப்ரா உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டார். இவரைத்தொடர்ந்து உலக அழகி பட்டத்தை பெறும் 6வது இந்தியப் பெண் என்ற பெருமையை மனுஷி ஷில்லார் பெற்றுள்ளார்.

இந்நிலையில் மனுஷி ஷில்லாருக்கு டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, அவரை நினைத்து இந்தியா பெருமை கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close