[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் அமலுக்கு வந்தது புதிய சொத்து வரி!
  • BREAKING-NEWS காஞ்சிபுரத்தில் கனமழையால் 18 ஆயிரம் நெல் மூட்டைகள் வீண்- விவசாயிகள் வேதனை
  • BREAKING-NEWS மணல் கடத்தலையும், அதில் நேர்மையான அதிகாரிகள் கொல்லப்படுவதையும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது- சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
  • BREAKING-NEWS சென்னையில் ரகசியமாக நடைபெறும் குட்கா விற்பனை- அதிரடி காட்டிய போலீஸ்!
  • BREAKING-NEWS சென்னையில் விடிய விடிய கனமழை
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவின் முதல் கூட்டம் சென்னையில் செப்.24ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா லோகோவை டெல்லியில் வெளியிட்டார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

நேபாள நீர்மின் திட்டத்தை கைப்பற்றியது இந்திய நிறுவனம்

nepal-scraps-award-of-1200-mw-hydropower-project-to-chinese-firm

நேபாளத்தில் சீன உதவியுடன் செயல்படுத்த இருந்த நீர்மின் திட்டத்தை இந்திய நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றது முதல் அண்டை நாடான நேபாளத்துடனான உறவை வலுப்படுத்தி வருகிறார். ஏற்கெனவே நேபாள நாட்டுக்கு ரூ.6,250 கோடி கடனுதவி வழங்குவதாகவும் அறிவித்திருந்தார். மேலும் மோடியின் பயணத்தின் போது பல்வேறு ஒப்பந்தங்கள் இருநாடுகள் இடையே கையெழுத்தாகின.

ஏற்கெனவே நேபாள பிரதமர் புஷ்பா கமல் தாஹல் மற்றும் சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் இடையே சில நீர்மின் திட்டங்கள் ஒப்பந்தமாகி இருந்தன.தாஹல் பதவியை விட்டு வெளியேறிய பிறகு அங்கே பல அரசியல் மாற்றங்கள் நடைபெற்றன. அதன் முதல் கட்டமாக சீன ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது நேபாள அரசு.மேலும் அத்திட்டங்களை நேபாள அரசு இந்திய நிறுவனத்திற்கு வழங்கியது. 
சீன நிறுவனத்திற்கு வழங்க இருந்த 1200 மெ.வாட் நீர்மின் திட்டத்தை இந்திய நிறுவனங்களான ஜி.எம்.ஆர் பவர் மற்றும் ஜெய் வித்தூட் நிகாம் கைப்பற்றி உள்ளன. இதனால் இந்தியா மற்றும் நேபாள நாடுகள் இடையேயான உறவு மேலும் வலுப்பெற்றுள்ளது என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது பிரதமர் மோடிக்கு கிடைத்த வெற்றி என தமிழக பாஜக தலைவர் தமிழிசை குறிப்பிட்டுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close