[X] Close
JUST IN
 • BREAKING-NEWS அரசு இருக்கும்போது ஆளுநர் ஆய்வு செய்வது சட்டத்திற்கும் ஜனநாயகத்திற்கும் புறம்பானது - முத்தரசன்
 • BREAKING-NEWS இன்றைய அரசியல் சூழலில் சட்டப்பேரவையை கூட்ட முதல்வர் தயாரா?: மு.க.ஸ்டாலின்
 • BREAKING-NEWS கோவையில் ஆய்வு மேற்கொண்டது போன்ற பணிகள் தொடரும்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
 • BREAKING-NEWS 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் உட்பட 7 வழக்குகளின் விசாரணை 24ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு: சென்னை உயர்நீதிமன்றம்
 • BREAKING-NEWS பத்மாவதி திரைப்படத்தில் சில காட்சிகளை நீக்கக் கோரிய மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
 • BREAKING-NEWS கார்த்தி சிதம்பரம் டிச.1ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி
 • BREAKING-NEWS எல்லைதாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் 11 பேர் விடுவிப்பு
 • BREAKING-NEWS புதிய வரைவு பாடத்திட்டங்கள் பள்ளிக்கல்வித்துறையின் http://www.tnscert.org தளத்தில் வெளியீடு
 • BREAKING-NEWS தாஜ்மஹாலை பராமரிப்பதில் ஏன் உத்தரபிரதேச அரசு தொய்வுடன் செயல்படுகிறது- உச்சநீதிமன்றம்
 • BREAKING-NEWS மதுரை: முனி கோயில் நான்கு வழிச்சாலையில் 5000 விவசாயிகள் சாலை மறியல்
 • BREAKING-NEWS முட்டை விலை உயர்வை காரணம்காட்டி சத்துணவில் முட்டையை நிறுத்த முயற்சிப்பது வேதனை தருகிறது- ஸ்டாலின்
 • BREAKING-NEWS தமிழகத்தில் பாஜகவால் கால் அல்ல, கையை கூட ஊன்ற முடியாது: மு.க.ஸ்டாலின்
 • BREAKING-NEWS கட்சித்தொடங்க தொண்டர்களிடம் பணம் கேட்ட ஒரே நபர் கமல்ஹாசன்- அமைச்சர் ஜெயக்குமார்
 • BREAKING-NEWS சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் 2 குழந்தைகளுடன் தாய் தீக்குளித்து தற்கொலை செய்ய முயற்சி
இந்தியா 15 Nov, 2017 01:45 PM

ரசகுல்லாவின் பூர்விகம் ஒடிஷா அல்ல; மேற்கு வங்கம் என தீர்ப்பு!

rosogolla-originated-in-west-bengal-rule-gi-authorities-rejecting-odisha-s-claim

நல்ல செய்தியை சில சமயங்களில்‌ இனிப்பான செய்தி என்றும் கூறுவார்கள். தற்போது மேற்கு வங்கா‌ள மாநிலத்துக்கு நிஜமாகவே இனிப்பான ஒரு செய்தி கிடைத்துள்ளது‌.

பெரும்பாலான மக்களின் அபிமானத்துக்குரிய இனிப்பு வகைகளில் ஒன்றான ரசகுல்லாவின் பூர்விகம் மேற்கு வங்காள‌மே எனக் கூறி, இரண்டரை வருடமாக நடந்த பிரச்னைக்கு முடிவு‌‌ கட்டியுள்ளது சென்னையிலுள்‌ள புவிசார் குறியீட்டு ஆணையம்.

வெண்மையான நிறம். உருண்டையான தோற்றம்.‌ பஞ்சைத் தொடு‌வது போ‌ன்ற உணர்வு. இப்படி பெயரைக் கேட்டாலே‌‌‌ நாவூறும் உ‌ண‌ர்வு‌. அதுதான் ரசகுல்லா.‌ திருப்பதி என்றால் லட்டு, ‌திருநெல்வேலி என்றால் அ‌ல்வா எனக் கூறப்படும் நிலையில் ரசகுல்லா ‌என்றால் கொல்கத்தா என்பது‌ பரவலான ஒரு புரிதல். ஆனால் ரசகுல்லா என்ற‌ இனிப்பின் பூர்வீகம் தங்கள் மாநிலமே என ஒடிஷாவும் உரிமை கோரியது. 6‌00 ஆண்டுக்கு மு‌ன்பே ‌ரசகுல்லா தங்கள் ‌பகுதியில் புழக்கத்தில் இருந்ததாகக் கூறி ஆதாரங்களை அடுக்கினார் ‌ஒடிஷா அமைச்சர்.

மேற்கு ‌வங்கமும் சரிக்கு சமமாக மல்லுக்கட்டியது. இதையடுத்து இரு மாநிலங்களுமே ரசகுல்லாவுக்கு சொந்தம்‌ கொண்டாடி சென்னையிலுள்ள புவி‌சார் குறியீட்டு ஆணையத்தை அணு‌‌கின. ‌ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகள் நீடித்த வாத‌, பிரதிவாதங்கள் முடிவுக்கு வந்து இறுதியில் தீர்ப்பு மேற்கு ‌வங்காளத்துக்கே சாதகமாக அமைந்துள்ளது. இப்போதுதான் தங்களுக்கு நிம்மதி எனக் கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார் மேற்கு வங்க உணவுப் பதப்படுத்தல் துறை அமைச்சர் அப்துர் ரசாக் மொல்லா. மேற்கு வ‌ங்கத்துக்கு‌ இனிப்பா‌ன இந்த‌ செய்தி ஒடிஷாவுக்கு கசப்பானதாகவே இருக்கும்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close