[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடு முழுவதும் தீபாவளி சமயத்தில் பட்டாசு வெடிக்க 2 மணிநேரம் மட்டுமே அனுமதி- உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS ஆன்லைனில் பட்டாசுகளை விற்க தடை விதித்தது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS நாடு முழுவதும் பட்டாசு விற்பனைக்கோ, தயாரிக்கவோ தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.53 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.15 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS வடக்கு அந்தமான், கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 12 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS பணத்திற்காக வாக்களிப்பது தன்னைத்தானே விற்பதற்கு சமம்: வைகோ
  • BREAKING-NEWS பாஜக நோட்டுகள், டோக்கன்களை தந்து வாக்கு கேட்காது; திட்டங்களை தந்து மட்டுமே வாக்கு கேட்கும் - தமிழிசை

டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி

narendra-modi-concludes-manila-visit

பிலிப்பைன்ஸில் நடைபெற்ற ஆசியான் மாநாட்டில் பங்கேற்ற பிறகு பிரதமர் நரேந்திர மோடி நேற்று நள்ளிரவு டெல்லி திரும்பினார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில், ஆசியான் - இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளின் இரண்டு நாள் மாநாட்டில் பிரதமர் பங்கேற்றார். மாநாட்டிற்கிடையே, அமெரிக்க அதிபர் டிரம்ப், பிலிப்பைன்ஸ் அதிபர் டியூடர்டே, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உள்ளிட்ட தலைவர்களை மோடி தனித்தனியாக சந்தித்துப் பேசினார். இரண்டு நாள் மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, தீவிரவாதத்தை குறைக்க ஆசிய நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதற்கிடையே, ஜப்பான் பிரதமருடனான மோடியின் சந்திப்பை தொடர்ந்து ஜப்பான் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவுக்கான விசா விதிகள் தளர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய விதிகளின்படி, மல்டிபுள் எண்ட்ரி விசா காலத்தை 5 ஆண்டுகளாகவும், ஒரு முறை வரும் போது அதிகபட்சம் 90 நாட்கள் தங்கும் வகையிலும் விதிகளில் திருத்தம் செய்யப்படும் என ஜப்பான் தூதரகம் தெரிவித்துள்ளது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close