[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சமூகத்தின் மிகப்பெரிய பிரச்னை சாதி; நாட்டில் இன்னும் சாதி வேற்றுமை உள்ளது - ப.சிதம்பரம்
  • BREAKING-NEWS பாஜகவின் பலத்தை எதிர்க்கட்சிகளால் எதிர்கொள்ள முடியாது- தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS மாநில உரிமைகளில் ஆளுநர் தொடர்ந்து தலையிடுவதை பொறுத்துக்கொள்ள முடியாது- மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS மதுரையில் அமைக்கப்பட உள்ள் எய்ம்ஸ் போல் மேலும் ஒரு எய்ம்ஸ் வந்தாலும் நல்லதுதான் - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS பிரதமர் மோடி கூட்டாட்சி தத்துவத்தை மறந்துவிட்டார்- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

பாகிஸ்தான் சிறுவனுக்கு உதவிய சுஷ்மா ஸ்வராஜ்

sushma-swaraj-helped-to-pakistani

இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக விசா கோரிய பாகிஸ்தான் சிறுவனுக்கு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உதவி செய்துள்ளார்.

பாகிஸ்தானை சேர்ந்த தாகூர் அலி என்பவரின் 16 மாத மகனுக்கு அரிய வகை இதய நோய் ஏற்பட்டுள்ளது. இதற்காக பாகிஸ்தானில் சிகிச்சை மேற்கொண்ட தாகூர் அலி, அங்கு சிகிச்சை பலனளிக்காததால் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தூபாய்க்கு மகனை அழைத்து சென்றுள்ளார். அங்கு அந்த 16 மாத சிறுவனுக்கு பினோத் குமார் என்ற மருத்துவர் சிகிச்சை அளித்துள்ளார். இருப்பினும் சிறுவனுக்கு இதயத்தில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியுள்ளதாக கூறிய மருத்துவர், அந்த சிகிச்சை இந்தியாவில் சிறந்த முறையில் செய்யப்படுவதாக பரிந்துரை செய்துள்ளார்.

இதனால் இந்தியாவிடம் விசா வழங்கக்கோரி தாகூர் அலி விண்ணப்பித்துள்ளார். அத்துடன் இதுதொடர்பாக ட்விட்டரில் சுஷ்மாவிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதையடுத்து அந்த விண்ணப்பத்திற்கு 24 மணி நேரத்தில் அனுமதி அளித்து சுஷ்மா ஸ்வராஜ் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் சிறுவனின் சிகிச்சை குறித்து வருத்தமடைய வேண்டாம் என்றும் தாகூருக்கு ஆறுதல் கூறியுள்ளார். இதையடுத்து விசா கிடைக்க உதவிய சுஷ்மாவிற்கு, தாகூர் மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார். இந்தியா-பாகிஸ்தான் இடையே எல்லை பிரச்னை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், பல பாகிஸ்தானியர்களுக்கு சிகிச்சைக்காக சுஷ்மா அனுமதியளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close