[X] Close
JUST IN
 • BREAKING-NEWS ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 62ஆவது படத்தின் பூஜை நாளை நடைபெறுகிறது
 • BREAKING-NEWS நான் இந்துக்களுக்கு எதிரானவன் அல்ல; மோடிக்கு எதிரானவன்: பிரகாஷ் ராஜ்
 • BREAKING-NEWS ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்துவுக்கு ஆதரவாக ரஜினி இருந்திருக்க வேண்டும் - சீமான்
 • BREAKING-NEWS வைரமுத்துவை காரணம் காட்டி தமிழகத்திற்குள் கொல்லைப்புறமாக வர நினைத்தால் வர முடியாது - பாரதிராஜா
 • BREAKING-NEWS ஹெச். ராஜாவும், தமிழிசையும் இணைந்து மெர்சல் படத்தை சூப்பர் ஹிட் ஆக்கிவிட்டனர்- நடிகர் விஷால்
 • BREAKING-NEWS நடிகர் கமல், ரஜினி, விஷால் ஆகிய மூவரும் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் - பிரகாஷ்ராஜ்
 • BREAKING-NEWS ஆண்டாள் சர்ச்சை தேவையற்றது- ஓ. பன்னீர் செல்வம்
 • BREAKING-NEWS ஒகி புயலால் காணாமல்போன மீனவர்களை தேடும்பணி நிறுத்தப்பட்டுள்ளது- அமைச்சர் நிர்மலா சீதாராமன்
 • BREAKING-NEWS வடலூர் வள்ளலார் தைப்பூச ஜோதி தரிசனத்தையொட்டி ஜன.31 இல் கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
 • BREAKING-NEWS நாகலாந்து, மேகாலாயா மாநிலங்களில் பிப்-27 ஆம் தேதியும், திரிபுரா மாநிலத்தில் பிப்-18 ஆம் தேதியும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும்- தேர்தல் ஆணையம்
 • BREAKING-NEWS ஜெ.சிகிச்சையின்போது உடன் இருந்த சசிகலாவுக்குத் தான் அனைத்து உண்மைகளும் தெரியும்- வைகோ
 • BREAKING-NEWS சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்கள் தொடர்ந்து 24வது நாளாக காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்
 • BREAKING-NEWS டெல்லியில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் பட்ஜெட்டுக்கு முந்தைய கூட்டத்தில் ஓபிஎஸ் பங்கேற்கிறார்
 • BREAKING-NEWS கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி 2வது நாளாக ஸ்ரீவில்லிபுத்தூரில் தொடர் உண்ணாவிரத போராட்டம்
இந்தியா 12 Nov, 2017 10:07 PM

பசுக்களை ஏற்றிச் சென்ற இஸ்லாமியர் சுட்டுக் கொலை

muslim-man-shot-dead-by-cow-vigilantes-in-rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் பசுக்களை வாகனத்தில் ஏற்றிச் சென்ற இஸ்லாமியர், பசு பாதுகாவலர்கள் என்று கூறுபவர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியானாவைச் சேர்ந்த பால் விவசாயி கடந்த ஏப்ரல் மாதம் படுகொலை செய்யப்பட்ட அல்வார் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அல்வார் மாவட்டத்தைச் சேர்ந்த உமர்கான் என்பவர் அவரது உதவியாளர் தஹிர் கான் என்பவருடன் 4 பசுக்களை வாகனத்தில் ஏற்றிக் கொண்டு பாரத்பூர் மாவட்டத்தில் உள்ள காத்மிகா கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, உமர்கானின் வாகனத்தை சிலர் வழிமறித்து அவரையும், உதவியாளரையும் தாக்கியுள்ளனர். பசு பாதுகாவலர்கள் என்று கூறுபவர்கள் இந்த தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது. தாக்குதலில் ஈடுபட்டவர்கள், உமர்கானை சுட்டுக் கொன்றனர். படுகாயத்துடன் உதவியாளர் அங்கிருந்து தப்பிச் சென்றார். பின்னர், உமர்கானின் சடலத்தை அருகில் உள்ள ரயில் பாதையில் போட்டுவிட்டு சென்றுள்ளனர். ரயில் பாதையில் இருந்து சடலத்தை கைப்பற்றிய போலீசார், அல்வாரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

உமர்கானின் சடலத்தை வாங்க அவரது உறவினர்கள் மறுத்துவிட்டனர். தாக்குதல் நடத்துபவர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவர்கள் குற்றம்சாட்டினர். இந்த சம்பவம் தொடர்பாக உமர்கானின் உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால், இன்னும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யவில்லை என்று கூறப்படுகிறது. தப்பிச் சென்ற உதவியாளர் தஹிர்கான் பெராஸ்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close