[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு
  • BREAKING-NEWS தனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS ஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்

சினிமா பாணியில் மோதிக்கொண்ட வாகனங்கள்: டெல்லி மக்கள் பீதி

vehicles-struck-in-cinematic-style-delhi-people-panic

டெல்லியில் காற்று மாசுபாடு மற்றும் பனிமூட்டம் காரணமாக நெடுஞ்சாலையில் சென்ற 18 கார்கள், அடுத்தடுத்து மோதிக்கொண்ட வீடியோ காட்சி காண்போரை திகைக்க வைத்துள்ளது. 

டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசு அதிகரித்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், வியாபாரிகள், பொதுமக்கள் என அனைவரும் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். மேலும் காலை மற்றும் இரவு நேரங்களில் அதிகப்படியான பனிப்பொழிவும் ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளி செல்லும் மாணவர்களின் நலன் கருதி சில பள்ளிகளுக்கு விடுமுறையும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை டெல்லி, யமுனா எக்ஸ்பிரஸ் வே சாலையில் அதிகப்படியான பனிப்பொழிவு மற்றும் காற்று மாசு ஏற்பட்டிருந்ததால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகினர். மேலும் அங்கு ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக வாகன ஓட்டிகளுக்கு சாலைகள் தெளிவாக தெரியவில்லை. இதனால் இந்த சாலையில் சென்ற 18 கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகியது. இந்த கார்களில் பயணித்த பொதுமக்கள் அலறி அடித்தப்படி வெளியில் வந்து, அடுத்து வரும் கார்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். இருப்பினும் பாதை தெரியாததால் கட்டுப்பாட்டை இழந்த கார்கள் தொடர்ந்து மோதிக்கொண்டன. சினிமா சண்டைக்காட்சி போல்  காண்போரை கதிகலங்க வைக்கும் இந்த  வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.  

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:

[X] Close