[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு ஜூலை 18ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் - தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS சுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில், கடந்தாண்டு 3வது இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 9வது இடத்திற்கு பின்தங்கியது
  • BREAKING-NEWS குடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது; அத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது - மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. பேச்சு
  • BREAKING-NEWS ஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும் .கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை - டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS இந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்

காற்று மாசால் கலங்கியது டெல்லி

people-suffered-for-delhi-air-pollution

டெல்லியில், காற்றில் உள்ள மாசின் அளவு அபாயகரமான கட்டத்தை எட்டியுள்ளதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களுக்கு நுரையீரல் பாதிப்பு உள்ளிட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.

விவசாயக் கழிவுகள் எரிக்கப்படுவது, கட்டுமான பணிகள், வாகன போக்குவரத்து ஆகியவற்றின் காரணமாக காற்றில் மிக மோசமான அளவுக்கு மாசு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குளிர்காலம் தொடங்கியதும் காற்றின் வேகம் குறைந்ததும் இதற்கு காரணமாக இருக்கலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. எனவே டெல்லியில் சுகாதார அவசர நிலையை பிறப்பிக்குமாறு அரசுக்கு  இந்திய மருத்துவக் கவுன்சில், அறிவுறுத்தியுள்ளது. இதனிடையே, மோட்டார் வாகனங்களின் பயன்பாட்டை குறைக்கும் ஒற்றைபடை மற்றும் இரட்டை படை கார்களுக்கான திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவது குறித்தும் டெல்லி அரசு ஆலோசித்து வருகிறது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close