[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சமூகத்தின் மிகப்பெரிய பிரச்னை சாதி; நாட்டில் இன்னும் சாதி வேற்றுமை உள்ளது - ப.சிதம்பரம்
  • BREAKING-NEWS பாஜகவின் பலத்தை எதிர்க்கட்சிகளால் எதிர்கொள்ள முடியாது- தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS மாநில உரிமைகளில் ஆளுநர் தொடர்ந்து தலையிடுவதை பொறுத்துக்கொள்ள முடியாது- மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS மதுரையில் அமைக்கப்பட உள்ள் எய்ம்ஸ் போல் மேலும் ஒரு எய்ம்ஸ் வந்தாலும் நல்லதுதான் - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS பிரதமர் மோடி கூட்டாட்சி தத்துவத்தை மறந்துவிட்டார்- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

திருப்பதியில் இடைவிடாமல் பெய்யும் ‌மழை

heavy-rain-in-tirupati

ஏழுமலையான் கோயில் அமைந்துள்ள திருப்பதி திருமலையில் நேற்று மாலை முதல் இடைவிடாது மழை பெய்து வருகிறது. இதனால் பக்தர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்துவருகிறது. கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் திருப்பதியிலும் மழை பெய்து வருகிறது. திருப்பதி மலையில் நேற்று மாலை முதல் இடைவிடாது மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கியுள்ளது. மழையால் தரிசனத்துக்கு வந்த பக்தர்கள் சிரமப்படும் சூழல் உருவாகியுள்ளது. தொடர் மழையால் திருமலையில் உள்ள கோகர்பம், பாபவிநாசம், குமரதாரா, பசுப்புதாரா அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. தற்போது அனைத்து அணைகளிலும் 70 சதவீதம் வரை நீர் நிரம்பியுள்ளது.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close