[X] Close
JUST IN
  • BREAKING-NEWS எம்.எல்.ஏக்களுக்கு உயர்த்தப்பட்டுள்ள ஊதியத்தை பெறப்போவதில்லை- டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: பாம்பன் அருகே சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது
  • BREAKING-NEWS பேருந்து கட்டண உயர்வுக்கு டீசல் விலை உயர்வை காரணம் காட்டுவதை ஏற்க முடியாது- வைகோ
  • BREAKING-NEWS பேருந்து கண்டன உயர்வை கண்டித்து தமிழகத்தில் ஜன.24இல் விசிக சார்பில் ஆர்ப்பாட்டம்
  • BREAKING-NEWS பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக ஜன.27 இல் திமுக நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் மதிமுக பங்கேற்கும்
  • BREAKING-NEWS பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து ஜன.24 ஆம் தேதி பாஜக போராட்டம் நடத்தும்-தமிழிசை
  • BREAKING-NEWS ஜன. 12 இல் ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழகத் தேர்வு நாளை மறுநாள் நடைபெறும்
இந்தியா 04 Nov, 2017 07:29 PM

70 ரூபாய்க்காக மாணவியை நிர்வாணமாக்கி சோதனையிட்ட ஆசிரியை

madhya-pradesh-teenage-girl-allegedly-strip-searched-by-teacher-on-suspicion-of-stealing-rs-70

மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு பள்ளியில் சக மாணவியின் 70 ரூபாய் காணாமல் போனதற்காக வகுப்பு ஆசிரியை இரண்டு மாணவிகளை நிர்வாணமாக்கி சோதனையிட்டுள்ளார்.

மத்திய பிரதேசம் தாமோ மாவட்டத்தில் இயங்கி வரும் பள்ளியில், 10 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியின் 70 ரூபாய் காணாமல் போயுள்ளது. இதுபற்றி அந்த மாணவி வகுப்பு ஆசிரியையிடம் கூறியுள்ளார். இதனையடுத்து, மற்ற மாணவிகளின் பைகளை ஆசிரியை சோதனையிட்டார். பின்னர், குறிப்பாக இரு மாணவிகளின் பைகளை சோதனையிட்டு, அவர்கள் இருவரையும், தாங்கள் திருடியதாக ஒப்புக்கொள்ளச் சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளார். அதை மறுத்த அந்த இரு மாணவிகளின் ஆடைகளை கலைந்து நிர்வாணமாக்கி சோதனையிட்டுள்ளார் அந்த ஆசிரியர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறும்போது, எங்களது வகுப்புத் தோழி ஒருவர் 70 ரூபாய் பணத்தை தொலைத்துவிட்டார். என்னுடைய பையை சோதனையிட்ட ஆசிரியை, நான் எடுத்ததாக ஒப்புக்கொள்ளமாறு என்னை மிரட்டினார். நான் அதை மறுத்ததால், என்னையும், என் தோழியையும் நிர்வாணமாக்கினார் என்று கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரி கூறும்போது, அந்தப் பள்ளியிடம் இருந்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் உண்மையாயிருக்கும் பட்சத்தில், பள்ளியின் மீதும், ஆசிரியை மீதும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close