[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் கருத்து கேட்பு கூட்டம்
  • BREAKING-NEWS மாலத்தீவில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி
  • BREAKING-NEWS தேர்தலுக்கு பின்பும் பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்காது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ‘கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்த முடியாது’: சவுதி அரேபியா திட்டவட்டம்
  • BREAKING-NEWS ரஃபேல் விவகாரம்: ஊழல் ஒழிப்பு ஆணையத்தை இன்று அணுகுகிறது காங்கிரஸ்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை

உ.பி.யில் அனல் மின்நிலைய கொதிகலன் வெடித்து விபத்து - 16 பேர் பலி

16-dead-100-injured-in-boiler-blast-at-ntpc-power-plant-in-uttar-pradesh

உத்தரப்பிரதேசம் மாநிலம் ரேபரேலியில் மத்திய அரசுக்கு சொந்தமான தேசிய அனல் மின் நிலையத்தின் கொதிகலன் வெடித்து விபத்துக்குள்ளானதில், 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தலைநகர் லக்னோவில் இருந்து சுமார் 120 கி.மீ. தொலைவில் இந்த அனல்மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இதில், சுமார் 1,500 ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா். அனல்மின் நிலையத்தில் கழிவு சாம்பல் வெளியேற்றப்படும் கொதிகலன் இன்று மதியம் திடீரென வெடித்துச் சிதறியது. உயா் அழுத்தம் காரணமாக இவ்விபத்து நடைபெற்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த விபத்தில் சிக்கி 16 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். மேலும், இடைபாடுகளுக்கு இடையில் ஏராளமானோர் சிக்கி தவித்து வருகின்றனர். காயம் அடைந்தவர்கள் அனல்மின்நிலைய மருத்துவமனையிலும் லக்னோ மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் மீட்புப்பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
 
இதற்கிடையே, விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ள முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் பிற காயமடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரமும் வழங்க உத்தரவிட்டுள்ளார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close