[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.96 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.51 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்
  • BREAKING-NEWS நீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS முதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு
  • BREAKING-NEWS குண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS கேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு

ராகுல்காந்தி தலைமையில் இன்று காங்கிரஸ் பொறுப்பாளர்கள் கூட்டம்

rahul-gandhi-to-chair-congress-meet-on-today

டெல்லியில் இன்று நடைபெறவுள்ள அகில இந்திய காங்கிரஸ் பொறுப்பாளர்கள் கூட்டத்திற்கு அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி தலைமை தாங்குகிறார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவராக செயல்பட்டு வருபவர் சோனியா காந்தி. இவர் உடல்நலக்குறைவு காரணமாக கட்சி நிகழ்ச்சிகள், கூட்டங்களில் பங்கேற்காமல் தவிர்த்து வருகிறார். அண்மையில் வயிறு தொடர்பான பிரச்னை காரணமாக டெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார். இதனிடையே காங்கிரஸ் தலைவராக விரைவில் ராகுல்காந்தி பதவியேற்பார் என அக்கட்சியின் பல தலைவர்கள் கருத்து
தெரிவித்து வருகின்றனர்.

இருப்பினும் ராகுல்காந்தி காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்பதில் கால தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில் இன்று நடைபெறும் அகில இந்திய காங்கிரஸ் பொறுப்பாளர்கள் கூட்டத்திற்கு அவர் தலைமை ஏற்கிறார். பண மதிப்பு நீக்க நடவடிக்கை அமலுக்கு வந்த நவம்பர் 8-ஆம் தேதியை கருப்பு தினமாக அனுசரிப்பது உள்ளிட்ட பலவேறு விவகாரங்கள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close