சாமி ஆராட்டு விழாவுக்காகத் திருவனந்தபுரம் விமான நிலையம் இன்று 5 மணி நேரம் மூடப்படுகிறது.
திருவனந்தபுரத்தில், புகழ்பெற்ற பத்மநாப சுவாமி கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு வருடமும் பங்குனி மற்றும் ஐப்பசி மாதத்தில் நடக்கும் விழாவின், கடைசி நாளில் ஆராட்டு எனப்படும் புனித நீராடல் நிகழ்ச்சி நடக்கும். இதற்காக கோவிலில் இருந்து அருகில் உள்ள கடற்கரைக்கு சுவாமி ஊர்வலம் செல்லும். இந்த ஊர்வலம் திருவனந்தபுரம் விமான நிலைய, ரன்வே வழியாக செல்வது வழக்கம். இந்த ஆண்டு இந்த ஊர்வலம் இன்று மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை நடக்கிறது. இதற்காக ஏர்போர்ட் 5 மணி நேரம் மூடப்படுகிறது.
இதுகுறித்த தகவல்கள் அனைத்து விமான நிறுவனங்களுக்கும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுவிட்டதால் அந்த நேரத்தில் திருவனந்தபுரத்துக்கு விமானங்கள் வராது. அங்கிருந்தும் விமானங்கள் செல்லாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முள்காட்டில் வீசப்பட்ட குழந்தையை நாய்கள் தின்ற அவலம்
ஆசிஃபா பற்றி பேசியதால் மாணவி இடைநீக்கம்: மனம் மாறிய கல்லூரி நிர்வாகம்
தீபக் மிஸ்ராவை தகுதி நீக்க என்ன செய்ய வேண்டும் ? சட்டம் சொல்வது என்ன ?
40 ஆண்டுகளுக்குப் பின் யூடியூப் உதவியால் ஒன்று சேர்ந்தக் குடும்பம்!
சிபிஎஸ்இ குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் இல்லை
கடுகு டப்பாவும், பேங்க் டெபாசிட்டும் ! பெண்களுக்கு சில டிப்ஸ்
அதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..? ஒரு பார்வை..!
நாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்
11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்
தீண்டாமைக்கு சம்மட்டி அடி ! தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்