இந்திய கடலோர காவல்படை மற்றும் எல்&டி நிறுவனத்திற்கு இடையே கடந்த 2015-ஆம் ஆண்டு கையெழுத்தான ஒப்பந்தத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட ரோந்து கப்பல், இந்திய கடலோர காவல்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த விழா இந்திய கடலோர காவல்படையின் கூடுதல் இயக்குனர் மூர்த்தி தலைமையில் சென்னை காமராஜர் துறைமுகத்தில் நடைபெற்றது. 186.5 கோடி ரூபாய் செலவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கப்பல் பல்வேறு பரிசோதனைகளுக்கு பிறகு, ஏப்ரல் 2018-க்குள் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கப்பலின் வேகம், திறன் ஆகியவை சோதிக்கப்பட்டு, ரோந்து பணிக்கு உகந்ததென்று கண்டறியப்பட்டால், பின்னர் இந்திய கடலோர காவல்படைக்கு அர்ப்பணிக்கப்படும். 98 மீட்டர் நீளம், 15மீ அகலம், 2,100 டன் எடை கொண்ட இந்த கப்பல் 25 கி.மீ முதல் 48 கி.மீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. எல்லா ரோந்து கப்பல்களை போல், இதிலும் ரேடார் கருவிகள், தொலைதொடர்பு மற்றும் வழி காட்டி கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
18 மாத மின்கட்டண பாக்கி: அப்துல் கலாம் பயின்ற பள்ளியில் மின்இணைப்பு துண்டிப்பு
700 ஆண்டுகள் பழமையான ஆலமரத்திற்கு ஆபத்து: மீட்டெடுக்க சிகிச்சை
எம்.பி. சசிகலா புஷ்பாவின் கணவர் அளித்த புகார்: சத்யபிரியாவை கைது செய்ய இடைக்காலத் தடை
ஊழலை கட்டுப்படுத்தும் மருந்து லோக் ஆயுக்தா: அரசுக்கு கமல்ஹாசன் வலியுறுத்தல்
‘வாடகை கொடுத்தாதான் பாத்ரூம் போகனும்’ அவமானத்தில் தூக்கிட்டு கொண்ட பெண் !
கடுகு டப்பாவும், பேங்க் டெபாசிட்டும் ! பெண்களுக்கு சில டிப்ஸ்
அதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..? ஒரு பார்வை..!
நாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்
11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்
தீண்டாமைக்கு சம்மட்டி அடி ! தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்