[X] Close
JUST IN
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சுகேஷ் சந்திரசேகரின் கூட்டாளி புல்கித் என்பவர் கைது
 • BREAKING-NEWS கந்துவட்டி தொடர்பாக பொதுமக்கள் அச்சமின்றி புகார் அளிக்க முன்வர வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார்
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தேர்தல் தேதியை இறுதி செய்ய 2 நாளில் டெல்லி செல்கிறார் ராஜேஷ் லக்கானி
 • BREAKING-NEWS கந்துவட்டியால் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்களின் பட்டியலை தயார் செய்ய விஷால் உத்தரவு
 • BREAKING-NEWS புதிய மணல் குவாரிகள் அமைப்பதை கைவிடாவிட்டால் மக்கள், விவசாயிகள் ஆதரவுடன் போராட்டம்: மு.க.ஸ்டாலின்
 • BREAKING-NEWS கந்துவட்டி கொடுமையால் அசோக்குமார் தற்கொலை விவகாரத்தில் காவல்துறை சிறப்பாக செயல்படுகிறது: இயக்குநர் அமீர்
 • BREAKING-NEWS சென்னை போயஸ் கார்டனில் பாதுகாப்பு பணிக்காக அதிகளவில் போலீசார் குவிப்பு
 • BREAKING-NEWS தமிழகத்தின் பல்வேறு இடங்களில் திமுக சார்பில் ரேஷன் கடைகள் முன் போராட்டம் தொடங்கியது
 • BREAKING-NEWS ஜெயலலிதா மரணம் தொடர்பாக தமிழக அரசு அமைத்த ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தின் விசாரணை தொடங்கியது
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகும் என தகவல்
 • BREAKING-NEWS அனைவரும் ஒன்றாக, இணைந்தே இருக்கிறோம்: அமைச்சர் கடம்பூர் ராஜூ
 • BREAKING-NEWS இரு அணிகளின் மனம் இணைந்தே செயல்படுகிறது: பொன்னையன்
 • BREAKING-NEWS ரூ.18 ஆயிரம் கோடி கடனில் உள்ள தமிழக போக்குவரத்துத்துறையை மீட்டெடுக்க வேண்டும்: விஜயகாந்த்
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்னத்தோடு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை சந்திப்போம்: தம்பிதுரை
இந்தியா 26 Oct, 2017 07:05 PM

இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக் மீது 58 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல்

nia-files-charge-sheet-against-zakir-naik-in-hate-speech-incitement-case

தற்போது வெளிநாட்டில் உள்ள இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக் மீது தீவிரவாத செயல்களில் ஈடுபட தூண்டியதாக தேசிய புலனாய்வு அமைப்பு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

வங்கதேச தலைநகர் டாக்காவில் வெளிநாட்டினர் தங்கி இருந்த ஒரு ஓட்டலில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 22 பேர் உயிரிழந்தனர். தாக்குதலில் தொடர்புடையவர்களில் ஒருவரான ரோகன் இம்தியாஸ், மும்பையை சேர்ந்த இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக்கின் பேச்சுக்களை சமூக வலைத்தளத்தில் பரப்பி இருந்தார். இதனால் அவர் ஜாகிர் நாயக்கின் வன்முறை பேச்சால் பயங்கரவாத தாக்குதலுக்கு தூண்டப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.

51 வயதாகும் ஜாகிர் நாயக், கடந்த ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி இந்தியாவில் இருந்து வெளியேறினார். அதன் பிறகு அவர் இந்தியா திரும்பவில்லை. ஜாகிர் நாயக் மீது இந்திய தண்டனை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் தேசியப் புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் கடந்த ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தனர். அதற்கு முந்தைய தினம், ஜாகிர் நாயக்கின் இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளையை சட்ட விரோத அமைப்பாக மத்திய அரசு அறிவித்தது. வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசியது, தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளித்தது, கருப்புப் பண மோசடி ஆகியவை ஜாகிர் நாயக் மீதான குற்றச்சாட்டுகளாகும். இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, தேசியப் புலனாய்வு அமைப்பு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. இதற்கிடையில், ஜாகிர் நாயக்கை தேடப்படும் குற்றவாளியாக தேசிய புலனாய்வு அமைப்பு அறிவித்தது.

இன்று, இளைஞர்களை தீவிரவாத செயல்களில் ஈடுபட தூண்டியதாக தொடரப்பட்ட வழக்கில் ஜாகிர் நாயக் மீது தேசிய புலனாய்வு அமைப்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செயதுள்ளது. 58 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையில் ஜாகிர் நாயக் தலைமறைவாகிவிட்டதாகவும் மதரீதியான பிரச்னையை தூண்ட சதி செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

தற்போது சவுதி அரேபியாவில் உள்ள ஜாகிர் நாயக், அந்நாட்டு குடியுரிமை பெற முயற்சித்து வருகிறார். ஆனால் இன்னும் கிடைக்கவில்லை. முன்னதாக இந்திய ஊடகங்களுக்கு பேட்டியளித்த போதெல்லாம் தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் ஜாகிர் நாயக் மறுத்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:

[X] Close