[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லியில் 28 ஆவது ஜிஎஸ்டி கூட்டம் அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் தொடங்கியது
  • BREAKING-NEWS இந்தியா திருக்கோயில் என்றால், கடவுள் இருக்கும் இடம் தமிழ்நாடு- முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நிதி மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்பட்டு நிறைவேற்றப்படும்- புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் அருகே முயல் தீவுப் பகுதியில் ரூ.4 கோடி மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல்
  • BREAKING-NEWS நாடு முழுவதும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் 2 ஆவது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS விருதுநகர்: ராஜபாளையம் அருகே திருவள்ளூர் நகரில் பாலியல் புகாரில் பள்ளி தலைமை ஆசிரியர் கைது

இந்தியப் பொருளாதாரம் வலிமையாக உள்ளது: அருண் ஜேட்லி

arun-jaitley-about-india-economy

இந்தியப் பொருளாதாரம் வலிமையாக இருப்பதாகவும், அதிக வளர்ச்சி விகிதம் கண்ட நாடுகளில் இடம்பெற்றிருப்பதாகவும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் ரொக்கப் பரிவர்த்தனைகள் குறைந்து மின்னணு பொருளாதார நடவடிக்கைகள் அதிகரித்திருப்பதாகக் கூறியுள்ளார். ஆனால், பணமதிப்பு நீக்க நடவடிக்கையை கருப்பு தினமாக நவம்பர் 8ஆம் தேதி அனுசரிக்கவுள்ள எதிர்க்கட்சியினர், ரொக்கத்தை கையாளுவதையே விரும்புவது மக்களிடம் பகிரங்கமாக தெரியவரும் என்று விமர்சித்துள்ளார். அத்துடன் இந்தியப் பொருளாதாரம் உறுதியுடன் உள்ள போதிலும், சில துறைகளை மட்டும் முடுக்கிவிட வேண்டியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி போன்ற நடவடிக்கைகள் பொருளாதாரத்தை மேம்படுத்தவே அமல்படுத்தப்பட்டாலும், சிறிது காலத்திற்கு அவை பொருளாதாரத்தை பாதிக்கத்தான் செய்யும் என்று அவர் கூறியுள்ளார். நிதி ஒதுக்கீடுகளின்போது சாலை மேம்பாடு, உட்கட்ட அமைப்புகள் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும், பொதுத்துறை வங்கிகளை வாராக்கடனில் இருந்து மீட்க நிதி ஒதுக்கீடு மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close